எமக்கு அனுப்பப்படுகின்ற  மின்னஞ்சல்களில் சிலவற்றை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறோம். இந்தக் கடிதங்களும், அதில் வரும் விடயங்களும் எழுதுபவர்களின் சொந்தக் கருத்துக்களே.

 


 

வி.சபேசன் அவர்களுக்கு,

 

வெப்ஈழத்தில் டென்மார்க் அபிராமி அம்மனைபற்றிய விமர்சனத்தை பார்த்தேன், தயவு செய்து அந்த அபிராமி அம்மனைப்பற்றி தவறாக எழுதுவதை நிறுத்தவும். இந்த அபிராமி அம்மன் தான் தோன்றி அம்மனாக மனித ருபத்தில் இக்கலியுகத்தில் அவதரித்து உலகமக்களை நோய், பிணிகள்,  தீயவினைகள் போன்றவற்றில் இருந்து காப்பாற்றி அபருள்புரிகின்றார்.  இப்படிபட்ட நடமாடும் தெய்வத்தை  தவறாக எழுதி தெய்வக்குற்றத்துக்கு ஆளாகாதீர்கள். உதாரணத்திற்கு வைத்தியரால் என் சுகவீனத்தை மாற்றமுடியாது கைவிடப்பட்ட நான் இன்று இந்த அபிராமி அம்மாவால் உயிர் பிழைத்துள்ளேன். அபிராமி அம்மன் டென்மார்கிலே பெரிய பணகாரர் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள், அப்படியல்ல ஆடம்பரமற்று இல்லறத்தை துறந்து துறவியாகி காவியுடையுடன் உறக்கமின்றி ஊன் இன்றி தன்னை பற்றி கவலைப்படாது இராப் பகல் என்று பார்க்காது மக்களின் துயர் துடைத்து வாழ வைக்கும் தாய் மக்களுக்காகவே ஆலயத்தை கட்டி மக்களுக்காகவே அந்த அபிராமி அம்மா வாழ்கின்றார். சபேசன் அவர்களே! நீங்களும் ஒருகாலத்தில் அந்த அபிராமி அம்மனிடம் போய் என்னை காப்பாற்றி அருள்புரிய வேண்டும் கேட்கும் காலம் வெகுவிரைவில் வரும்.

 

 -அபிராமி அம்மன் பக்தன்

 

 



வணக்கம் சபேசன்,

உங்களுடைய "ஐயப்பனும் ஈழபதீஸ்வரனும்" கட்டுரை படித்தேன். நானும் உங்களைப் போன்று பகுத்தறிவுச் சிந்தனை உள்ளவன்தான். நீங்கள் செய்கின்ற பிரச்சாரம் அவசியமான ஒன்றுதான். ஆனால் உங்களின் வார்த்தைகளில் "கிண்டலும் நக்கலும்" மிக அதிகமாக உள்ளது. நம்பிக்கை உள்ளவர்களின் மனதை நோகடிக்காது எழுதினால், அது மேலும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவர்கள் ஆத்திரத்தில் உங்களின் பக்கத்தை பார்க்காது விட்டுவிட்டால், உங்களின் நல்ல கருத்துக்கள் அவர்களை சேராமால் போய் விடும் அல்லவா? இவைகள் என்னுடைய தாழ்மையான கருத்துக்கள். தவறாகக் கருத வேண்டாம்.

- சோதிநாதன் (கனடா)

 




வணக்கம்,

உங்கள் தளத்தை நான் தொடர்ந்து பார்க்கின்றேன். உங்கள் தளத்தில் வரும் அனைத்துக் கட்டுரைகளும் அருமை. "கேலிச்சித்திரம்", "கவிதைகள்", "கதைகள்" போன்றவை நீண்ட நாட்களாக புதுப்பிக்கப்படாது இருக்கின்றது. இவைகளையும் நீங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.

 

-ஜெயக்குமார் (பிரான்ஸ்)


 




வணக்கம் சபேசன்,

தன்னுடைய படத்தின் வணிகத்திற்காக தன்னுடைய ரசிகர்களை ஏமாற்றுகின்ற ரஜனிகாந்தின் திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டும். இதன் மூலம் எமது ஒற்றுமையை உணர்த்துவதோடு பணத்தையும் மிச்சப்படுத்தலாம்.

ஆனால் இதை விட கோயில்களுக்கும் இல்லாத கடவுளுக்கும் பணத்தைக் கொட்டி வீணாக்குவதை தவிர்ப்பது மிக மிக அவசியம் ஆகும்.

- பிரின்ஸ் என்.ஆர்.சாமா (தமிழ்நாடு)


 




அன்புள்ள சபேசனுக்கு,

நான் கடந்த சில மாதங்களாக தினமும் வெப் ஈழம் முதல் பக்கம் பார்ப்பேன். கடந்த 21.04.06 க்கு பின் பல காலங்களாக கடிதங்கள் எதுவும் வராத காரணத்தினால் அப்பகுதியை இன்றுதான் பார்த்தேன். என்னுடைய மடலை வெளியிட்டுள்ளமைக்கு நன்றி. "சிவாஜி திரைப்படத்தை புறக்கணிக்க நேரிடும்" செய்திகளின் பார்வை மிகவும் உணர்வுபூர்வமானது. இதை நம் தமிழக திரையுலகக் கலைஞர்கள் கருத்தில் கொள்வார்களா? முன்பு திரையுலகத்தினர் பலர் ஈழத்தமிழர் போராட்டங்கள் பலவற்றை முன்னின்று நடத்தியுள்ளார்கள். ஆனால் இன்று ஒரு சிலரே கலந்து கொள்கிறார்கள் என்பது மிகவும் வருத்தத்துக்குரிய விடயமாகும். இந்நிலை மாற வேண்டும். எல்லோரும் ஒன்று பட்டு செயல்பட வேண்டும்.

ஈரானிலிருந்து சுரேஸ் வெண்முகிலன் வரைந்துள்ள மடல் கண்ணுற்றேன். சுரேஸ் போன்று பலர் தமிழ் நாட்டில் உருவானால் விரைவில் தமிழக அரசும் மத்திய அரசும் இலங்கை சிங்கள அரசுக்கு நெருக்கடி கொடுப்பதன் மூலமாக ஈழத்தில் விடிவு பிறக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. சுரேஸ_க்கு என் மனமார்ந்த நன்றிகள் பற்பல உரித்தாகட்டும்.

- தமிழன்பன் (சென்னை)

 

 




திரு சபேசன் அவர்களுக்கு,

வெப்ஈழம் பகுதியை தவறாது பார்ப்பவன் நான். நீங்கள் செய்துவரும் நற்பணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். சென்னை என் தாய்பூமி. தற்பொழுது ஈரான் நாட்டில் வசிக்கிறேன். என்னுடைய உயிர், உடல், உணர்வு முழுதும் ஈழம், ஈழம், ஈழந்தான். என்னுடைய அரசியல் தலைவர் திரு. வைகோ அவர்கள். ஆயின் என் தமிழினத்தின் முதல் தலைவர் மாவீரன் திரு பிரபாகரன் அவர்கள்தான். அவர் தலைமையில் நம் ஈழ வெற்றிக் கொடி நிச்சயம் பறக்கும்.

1988 மற்றும் 1989 ஆண்டுகளில் நான் பச்சையப்பன் கல்லூரியில் கல்வி பயின்ற பொழுது, பல ஈழ ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டுள்ளேன். தற்பொழுதும் நான் என்னாலானவரை ஈழப் போராட்டம் பற்றி என்னுடைய நண்பர்கள், உறவினர்கள் என்று பலருக்கு நயம்பட விளக்கி வருகிறேன். ஈழப் போராட்டம் குறித்து தவறான கருத்துக்களை கொண்டிருப்பவர்களிடம் ஈழப் போராட்டம் குறித்து சரியான முறையில் விளக்கி நம்முடைய பக்கம் திரும்பச் செய்து வருகிறேன்.

நான் தந்தை பெரியாரின் கொள்கைகளை ஆதரிப்பவன். நீங்களும் அதே போன்று இருப்பதில் மகிழ்ச்சி. ஆனால் வெறும் இந்து மதத்தை மட்டும் எதிர்ப்பது எனக்கு சரியாகப் படவில்லை. மற்றைய மதங்களிலும் மூடப் பழக்க வழக்கம் உள்ளது. அவைகள் குறித்தும் நீங்கள் எழுத வேண்டும்.

ஆனால் இவை எல்லாவற்றையும் விட எமது மக்களிடம் இனப்பற்றை உருவாக்க வேண்டும். அதை நீங்கள் செய்து வருகின்றீர்கள். உங்கள் பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள்.

- சுரேஸ் வெண்முகிலன் (ஈரான்)


 




வணக்கம்,

"ஜான் கொலையில் உள்ள மர்மங்கள்" ஒரு அருமையான கட்டுரை. "ஜனநாயகவாதிகள்" என்று சொல்லிக் கொண்டு தம்முடைய ஆட்களையே கொலை செய்து கொண்டு திரிகிறார்கள். இவர்களையும் இவர்களது எஜமானர்கள் ஒரு நாள் பலி கொடுப்பார்கள் என்பதை இவர்கள் உணர்ந்து கொள்வார்களா?

- தர்சன் (லண்டன்)



 




வணக்கம் சபேசன்,

கொல்லப்பட்ட ஜானின் சகோதரனாகிய சந்திவெளி மாமா என்பவன் சுவிஸ் பொலிஸாரால் தேடப்படும் ஒரு கொலைகாரன். இந்தக் கொலைகாரன் விடுத்த அறிக்கையை துரோக இணையத்தளங்கள் வெளியிட்டன. பின்பு அழித்துவிட்டன. சுவிஸ் பொலிஸார் இவனை தேடுவது பற்றிய அறிவித்தலை இத்துடன் இணைத்துள்ளேன்.
 

http://www.baselland.ch/docs/uebrige/mit_pol/2002/1999.htm


- குமரன் (டென்மார்க்)


 




வணக்கம்,

 

நான் உங்களின் இணையத்தளத்தை பார்த்தேன். மிகவும் சிறப்பாக உள்ளது. எமது போராட்டத்திற்கு நீங்கள் செய்து வரும் பணிக்கு வாழ்த்துக்கள். இக் கடிதத்தை உங்கள் தளத்தில் இணைக்கவும். நான் உங்களுக்கு தொடர்ந்து மின்னஞ்சல் அனுப்புவேன். நீங்கள் எமது போராட்டத்திற்கு என்றும் ஆதரவு தர வேண்டும்.

-சதீஸ்குமார் (கிளிநொச்சி)



 



 

அன்புள்ள ஆசிரியருக்கு,
 

நேற்றைய தினமணி நாளிதழில் “புலிகளின் ஆதரவு இணைய தளம் கலைஞருக்கு கண்டனம்” என்ற தலைப்பில் கருணா குழு தமிழகத்தில் உள்ள ஈழ தமிழர்களின் அகதி முகாம்களில் பரந்தன்ராசன் தலைமையில் ஆள்சேரப்;பதாகவும் அதனை ஈழ தமிழர்களில் அக்கறை கொண்டவர்கள் பலர் கடுமையாக எதிர்த்திருந்தும் கூட கலைஞர் அரசு அலட்சியம் செய்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆட்சிக்கு வந்ததும் ஈழ தமிழர்கள் பற்றி குறிப்பிட்ட கலைஞர் சிலநாள் மௌனத்துக்குப்பின் “தினக்குரல்” பத்திரிகைக்கு வழங்கிய விசேட பேட்டியில், “ஈழத்தமிழர்களுக்கோ புலிகளுக்கோ தி.மு.க. வும் நானும் எதிரிகளல்ல” என்றும் “விரைவில் புதுடில்லிக்கு நான் செல்கிறேன். அங்கு பிரதமர் உட்பட மத்திய அரசாங்கத்தின் தலைவர்களை சந்திக்கவுள்ளேன். அச்சந்திப்பின்போது ஈழத் தமிழரின் பிரச்சினைகள் குறித்து நிச்சயம் பேசுவேன். இலங்கையில் தமிழ் மக்களின் தற்போதைய நிலைமைகள் குறித்து விபரத்தை அறிந்துவருகிறேன். விரைவில் உரிய வேளையில் உரிய நடவடிக்கை எடுக்க தி.மு.க. அரசு ஒருபோதும் தயங்காது. இந்திய மத்திய அரசாங்கத்தினூடாக இலங்கை அரசின் கவனத்திற்கு ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்.” என்று குறிப்பிட்டிருந்ததும் இங்கு நினைவுக்கு எடுத்துக்கொள்ளப்படவேண்டிய விடயமாகும். ஆனால் தற்சமயம் “மத்திய அரசின் நிலைப்பாடு தான் எங்கள் நிலைப்பாடு” என்று பட்டும் படாமலும் அறிக்கை விடுத்திருக்கிறார்.

கடந்த 2 மாதங்களாக 300 அப்பாவி தமிழ் பொது மக்கள் கொடூரமாக சிங்கள இராணுவத்தினாலும் அவற்றுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுக்களினாலும் தாக்கிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். திட்டமிட்ட தமிழின படுகொலை ஈழத்தில் தினமும் அரங்கேறிக்கொண்டிருக்கும் வேளையில் சில கட்சித்தலைவர்களும் பல ஈழ தமிழர் ஆதரவு இயக்கங்களும் கண்டன அறிக்கைகள் வெளியிட்டும் ஆர்ப்பாட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கும் வேளையிலும் கூட கலைஞர் அவர்கள் ஈழ தமிழர்கள் (பிஞ்சுக்குழந்தைகள், சிறுவர்கள், பள்ளி மாணவர்கள், தாய்க்குலங்கள், நாட்டு பற்றாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள்) அநியாயமாக படுகொலை செய்யப்படுவதை கண்டும் காணாதிருப்பது உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் மிகையாகாது. தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அங்கே ஈழத்தில் தமிழினப் படுகொலை அறங்கேறிக்கொண்டிருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

இச்சமயத்தில் “உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு” என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்குக்கமைய கலைஞர் அவர்கள் உடனடியாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஈழத்தில் தமிழினப்படுகொலையை தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுப்பதன் மூலமாக ஈழ தமிழினத்தை அழிவிலிருந்து காப்பாற்றுவதோடு அனைவருடைய சந்தேகங்களையும் அறவே போக்கி தன் பெயரையும் தி.மு. கழகத்தின் பெயரையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கிறார். இல்லையேல் காலத்தால் அழியாத அவப்பெயருக்கு ஆளாவதோடு “ உலகத்தமிழர்களின் தலைவர்” என்ற பெயருக்கே பொருத்தமற்றவராகிவிடுவார் என்பதில் சிறிதும் ஐயமில்லை. தலைவர் கலைஞர் ஒருகணம் சிந்திப்பாராக.
 

- தமிழன்பன் (அடையார், சென்னை. 20.)


 




வணக்கம்,
நான் தமிழ்நாட்டை சேர்ந்தவன். ஐதராபாத்தில் (ஆந்திரப்பிரதேசம்) பணி புரிகிறேன். இங்கு வெளிவரும் ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் கருணாநிதி குறித்து நீங்கள் வெளியிட்ட செய்தி உங்களின் இணையத் தளத்தின் பெயரோடு வெளிவந்திருக்கிறது. கருணாநிதி குறித்து உங்களின் பார்வை சரியானது. அவரை நம்ப முடியாது. இதுதான் என்னுடைய கருத்தும்.
உங்களின் இணையத்தளம் மூலம் தமிழினத்திற்கு நீங்கள் செய்து வரும் தொண்டிற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
 

- ராஜ்குமார் (ஐதராபாத், இந்தியா)


 




திரு.சபேசன் அவர்களுக்கு.
வணக்கம். தமிழன் என்கிற மகிழ்ச்சியோடு இம்மடலை எழுதுகிறேன்.
தமிழீழம் அமைய வேண்டும். அதுதான் நிரந்தர தீர்வு என்பதை நம்புகிறவன்.
வெறும் துப்பாக்கியும் துணிவும் இருந்தால் மட்டும் போதாது.  இலக்கை அடைவதற்கு அதைவிட மிகப்பெரிய ஒரே ஆயுதம் ஒற்றுமை.
அது இல்லையென்றால் நீங்கள் கனவில் கூட தமிழீழத்தை காணமுடியாது!
உங்கள் குறிக்கோள், ஒற்றுமையை நம் தமிழர்களுக்குள் வளர்ப்பதற்கு மட்டுமே இருக்கட்டும்.

- தி தமிழ்ச்செல்வன் (சென்னை)


 




அன்புள்ள சபேசனுக்கு,

வணக்கம், உங்களின் கருணாநிதியின் துரோகம் பற்றிய ஆக்கம் படித்தேன். நீங்கள் எழுதியிருப்பது மிகச் சரி. கருணாநிதி. கருணாநிதி தன்னுடைய ஆயுட்காலம் முழுவதும் தமிழ்நாட்டை ஆள்வதையும், தன்னுடைய குடும்பத்தை வளர்ப்பதையும் மட்டுமே இலட்சியமாகக் கொண்டவர். அவர் தன்னுடைய பிறந்த நாளைக் கூட மக்களிடம் பணம் வசூல் செய்து கொண்டாடியவர். அவர் ஒரு போதும் ஈழத் தமிழர்களுக்கு எவ்வித உதவியையும் செய்ய மாட்டார் என்று நான் உறுதியாகக் கூறுவேன். ஈழத் தமிழீழர்கள் கருணாநிதியை நம்பி ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

- எம்.சாமுவேல் ஜெபர்சன் (இந்தியா)

 

 


 

 

வணக்கம்,
ஒரு மிக முக்கியமான செய்தியை நான் உங்களுடனும் வாசகர்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நேற்று 20 04.2006 வவுனியாவில் இனம் காணப்படாத இரு நபர்கள் கொலை செய்யப்பட்டு இருந்தார்கள். இவர்களது கொலைக்கு தமிழத் தேசியப் படை உரிமை கோரியிருந்தது .அதற்கான உரிமை கோரும் கடிதம் இச் சடலங்கள் அருகில் இருந்துள்ளது. இந்த தமிழ்த்தேசியப் படை என்றால் என்ன என்பது புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள பெரும்பாலான தமிழ் மக்களுக்கு தெரியவில்லை. இந்த தமிழ்த் தேசிய படை கருணா மற்றும் சில ஒட்டுப்படைகளின் கூட்டு இதில் பிரதான பங்கு கருணா ஒட்டுகுழு தான்.

இவர்கள் அப்பாவி பொதுமக்களை தொடர்ச்சியாக கொலை செய்து வருகின்றார்கள். இவர்களின் இவ் நடவடிக்கை தமிழர் தாயகத்தில் மட்டும் இல்லை தமிழர் புலம்பெயர்ந்த
நாடுகளிலும் உள்ளது.

தமிழத்தேசிய படையின் இணைய தளம் இயக்கப்படுவது டென்மார்க்கில் இருந்துதான். இதன் தொடர்பாளர்கள் குமாரதுரை குடும்பத்தை சேர்ந்த மதி, வதனன், குமாரதுரை ஆகியோரே.  இதற்கான ஆதார தகவல்கள் கீழ் தரப்பட்டுள்ளது.

இந்த தமிழத்தேசியப் படையினர் ஜரோப்பாவி்லும் அப்பாவி மக்களை கொலை செய்ய வாய்ப்புகள் உள்ளது.

தமிழ் குழுக்கள் இடையிலான மோதல்கள் கனடாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தடைக்கு ஓர் காரணம். இவ்வாறான நிலமையினை உருவாக்கியது சிறிலங்கா புலனாய்வுத்துறையும் அதனுடன் சேர்ந்து இயங்கும் ஒட்டுப்படைகளும் ஆகும். அதே போன்ற ஒரு நிலமையினை ஜரோப்பாவில் உருவாக்க தீவிரமான முயற்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே ஜரோப்பாவில் உள்ள ஒட்டுப்படைகளின் விபரங்களை தமிழ் மக்கள் விளங்கிக் கொண்டு இந்த ஒட்டுக் குழுக்களுக்கு எதிரான பரப்புரையினையும் சட்ட நடவடிக்கைகளையும் செய்ய வேண்டும்

 


 

- குமரன் (டென்மார்க்)
 

 


 

வணக்கம்,
நீங்கள் நலமா? நான் இங்கு நலமாக இல்லை. அன்று திருகோணமலையிலும் இன்று யாழ்ப்பாணத்திலும் நடந்த சம்பவங்களைக் கேள்விப்பட்ட பிறகு மனம் பொறுக்குதில்லை. விடுதலைப்புலிகள் ஏன் இன்னும் அமைதியாக இருக்கிறார்கள்? தமிழர்களைக் காக்க விடுதலைப்புலிகள் போரைத் தொடங்க வேண்டும். ஆட்கள் தேவை என்றால், நானும் எனது நண்பர்களும் வருவோம். தமிழுக்காக உயிர் கொடுக்க சித்தமாக இருக்கின்றோம்.
"பொறுத்தது போதும். பொங்கி எழுவோம்
வாழ்க பொங்கி எழும் மக்கள் படை"


நவனீதன் (தமிழ்நாடு)


 



 

அன்புள்ள சபேசன்,
நீங்கள் விடுதலை உணர்வுடனும், தேசப் பற்றுடனும் இருக்கின்றீர்கள். உங்கள் புரட்சிகரமான முற்போக்குச் சிந்தனை விடுதலைப் போராட்டப் புரட்சிக்கும் எழுச்சிக்கும் துணை புரியட்டும். வாழ்க உங்கள் எழுத்துப் பணி

பிரதீபன் (கிளிநொச்சி, தமிழீழம்)


 



 

ஏன்ரா லூசு ........ நீ வன்னியில் போயிருந்து உன்னுடைய இணையத்தளத்தை நடத்தலாமே?
வெளிநாட்டில் இருந்து கொண்டு போராட்டம் பற்றி பேசுகிறாய் .......... ராமராஜன் பற்றி நீ கவலைப்படத்தேவையில்லை.........
 

ரகு (கனடா)
(குறிப்பு: அன்பர் ரகு எழுதிய பல வரிகள் அச்சிலேற்ற முடியாதளவு மிக மோசமாக இருந்ததால் தணிக்கை செய்யப்பட்டுள்ளன.)

 

 


 

 

வணக்கம்,

"டென்மார்க் விவகாரங்களின் பின்னணி" என்னும் கட்டுரையை படித்தேன். நானும் டென்மார்க்கில் வாழ்வதால் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் நபர்கள் பற்றி பல விடயங்களை அறிந்துள்ளேன். இவர்கள் டென்மார்க்கில் விடுதலைப்புலிகளை தடை செய்வதற்கு எடுத்த முயற்சி இன்று தோல்வியில் முடிவடைந்துள்ளது. இந்த செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கருணா குழுவின் பேச்சாளர் மதிகுமாரதுரை மற்றும் கருணாகுழுவின் புலாய்வுத்துறைப் பொறுப்பாளர் வதனன் ஆகியோரினால் சோடிக்கப்பட்டு சில டெனிஸ் பத்திரிகையாளரின் உதவியுடன் தமிழ்த் தேசியத்திற்கெதிராக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்தை நம்பி டென்மார்க் பாரளமன்ற உறுப்பினர் ஒருவரால் தமிழீழ மக்களின் ஏகபிரதிநிதிகளான தமிழீழவிடுதலைப்புலிகளை டென்மார்க்கில் தடைசெய்யுமாறு வெளிநாட்டமைச்சரிடம் கேட்கப்பட்டிருந்தது. இதே பாரளுமன்ற உறுப்பினர் முன்பும் பல தடைவை இக்கருத்தை அறிவித்திருந்தார். ஆனால் மதி , வதனன் குமாரதுரை  கருணாகுழு பயங்கரவாதிகள் என்பதை பல தமிழீழ உணர்வாளர்கள் மின்னஞ்சல் முலம் டென்மார்க் அதிகாரிகள் அமைச்சர்கள் போன்றோருக்கு எடுத்துக் கூறியமையானாலும் டென்மார்க்கில் தமிழீழவிடுதலைப்புலிகளை தடைசெய்வதனால் நடைபெற்றுக்கொண்டீருக்கும் சமாதான முயற்சிகளுக்கு பாதகமாகவே அமையும் என்பதனாலும், டென்மார்க்கின் நடுநிலமை கேள்விக்குறியாகும் போன்ற பல விடயங்களை அறிந்துள்ள டென்மார்க் வெளிநாட்டமைச்சர் தமிழீழவிடுதலைப்புலிகளை தடைசெய்யத்தேவையில்லை என பதில் கூறியுள்ளார். டென்மார்க்கில் சட்டங்களை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போதுமான சட்டங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஜனநாயக அமைப்பென்ற பெயரில் இந்தக் கருணாகுழு உறுப்பினர்கள் சமாதான நடவடிக்கையை குழப்ப முயல்வதையும் டென்மார்க்கை தமிழீழ மக்கள் வெறுக்கக்கூடிய விதத்தில் டென்மார்க் நாட்டில் இருந்து கொண்டே பொய்யான செய்திகளை பரப்புவதையும் டென்மார்க் அமைச்சர்கள் அறிந்துள்ளார்கள். பிறந்த நாட்டிற்கு துரோகம் இழைத்துக்கொண்டிருக்கும் இவர்கள் இப்பொழுது தங்களுக்கு அடைக்கலம் கொடுத்த நாடுகளுக்கும் துரோகமிழைக்கப் புறப்பட்டுவிட்டார்கள். இது இவர்களின் இரத்தத்தில் ஊறிய விடயம்.

- குமரன் (டென்மார்க்)

 

 


 

 

வணக்கம் சபேசன்,

நான் உங்கள் இணையத் தளத்தை தினமும் பார்ப்பவன். மிக அருமையான ஒரு இணையத் தளம். உங்களின் ஆய்வுளும் நீங்கள் முன்வைக்கின்ற வாதங்களும் மிகவும் அழகாகவும் புதுமையாகவும் அத்துடன் நியாயமாகவும் இருக்கின்றன. மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.

தீபன் (ஜேர்மனி)

 


 




வணக்கம்,
உங்களின் "தொலைக்காட்சிகளில் மதப் பிரச்சாரங்கள்" படித்தேன். ஊடகங்கள் மதங்களை வியாபார நோக்கிற்காக பயன்படுத்துகின்றன. மூட நம்பிக்கைகள் கண்டிப்பாக களையப்பட வேண்டும். ஆனால் உங்களின் கண்ணிற்கு ஏன் "டண்" மட்டும் தெரிகிறது? ஏனைய பல ஊடகங்கள் மத நிகழ்ச்சிகளையும், மதம் சம்பந்தமான விளம்பரங்களையும் போடுகின்றன. அவைகளையும் கண்டியுங்கள். அத்துடன் இங்கு நிறைய கோயில்கள் உண்டு. புதிதாகவும் நிறையக் கோயில்கள் வர இருக்கின்றன. இவைகளைப் பற்றிய பகுத்தறிவாளர்களின் கருத்துக்களையும் எழுதுங்கள்.

சுதன் (பிரித்தானியா)

 


 

 

நீங்கள் 13.02.06 அன்று "டென்மார்க்கில் குடி கொண்ட சந்திரமுகி" எனும் தலைப்பில் எழுதியிருந்த கட்டுரையை வாசித்ததும், என்னுள் எழுந்த எண்ணங்களை உங்களுடனும் வாசகர்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழ்ந்தாலும், கால வளர்ச்சியில் எம்மினமும் வளர்ச்சியடைந்திருந்தாலும், சில சில விடயங்களில் எம் மக்கள் இன்னும் வளர்ச்சி அடையவில்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

எம் முன்னோர்கள் எமக்கு வழங்கிய சில நம்பிக்கைகளையும், கலாச்சார பண்பாடுகளையும் நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் சில விடயங்கள் நீங்கள் குறிப்பிட்டது போன்று எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கிறது.

ஒருவர் கடவுளை நம்புவதும், வணங்குவதும், கோயிலுக்கு செல்வதும் அவருடைய தனிப்பட்ட விடயம். ஆனால் மனிதப் பிறப்பாகிய பெண்ணை கடவுளின் பிறப்பாக வர்ணித்து கூத்தாடுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே எனக்கு படுகின்றது. இவற்றையெல்லாம் பார்க்கின்ற பொழுது ஒரு பெரிய கேள்வி என்னுள் எழுகின்றது. இந்தக் கேள்வி இந்து மத அனுட்டானங்களின் அடிப்படையில் கேட்கப்படும் கேள்வி. இதற்கு மனிதப் பிறப்பாக வந்துள்ள கடவுள்கள் பதில் தருவார்களா?

பெண்கள் மாதவிடாய் காலத்தில் கோயிலில் பிரவேசிக்கவோ, தரிசனம் செய்யவோ கூடாதென்று இந்து மதம் சொல்கிறது. இந்த நாட்களில் பெண்கள் வீட்டின் முன்பக்கம் வருவதும், தூய மூலிகைச் செடிகளின் பக்கம் வருவதும் கூடாது என்று சொல்லப்படுகிறது. ஆண்களின் அருகாமையும் அனுமதிக்கப்படவில்லை. இந்த நாட்களில் ஆண்கள் விரதம் பூண்டிருந்தால், ஆண்களே வெளியில் சமைத்து சாப்பிடும் பழக்கம் இருந்தது. விஞ்ஞானரீதியாக பார்க்கின்ற பொழுது, மாதவிடாய் கொண்ட பெண் பட்டுப்பூச்சிகளை வளர்க்கும் இடத்திற்கு சென்றால் அதன் புழுக்கள் மாண்டு போவதாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்த நாட்களில் பெண்களின் உடலில் ஏற்படும் வெப்ப மாற்றத்தால் இது நிகழ்கின்றது. அதே போன்று இந்த வெப்பமாற்றம் தேவ பிம்பத்தையும் பாதிக்கும். தன் உடலில் பட்டு நூலை உருவாக்கி, வலைக்குள் சமாதி இருக்கும் புழுக்களைப் போன்று கோயிலுக்குள் திவ்ய ஜீவசக்தியாய் இருக்கும் இறையின் நிலை பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவே பெண்கள் இக்காலங்களில் கோயில்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்று மத நம்பிக்கை உள்ளவர்கள் சொல்வார்கள்.

இப்படியான நிலையில் டென்மார்க் சந்திரமுகி கடவுளாக எப்படி இருக்க முடியும்?

இன்னுமொன்றையும் குறிப்பிட வேண்டும். உலகம் போற்றிப் புகழந்த அன்னை தெரசா தன்னை ஒரு போதும் கடவுள் என்று சொன்னதில்லை. அவரை யாரும் கடவுள் என்று வணங்கியதும் இல்லை. அவர் இறந்த பின்னர்தான் வத்திக்கான் அவரை "தி ஹோலி ஒன்" ஆக பிரகடனம் செய்தது. கடவுளாக அல்ல.

ஆனால் எம்மவர்கள் மனிதர்களை கடவுளாகவும், கடவுளின் அவதாரமாகவும் பிரகடனம் செய்கின்ற பொழுது, உண்மையிலேயே இவர்களுக்கு நோய் பிடித்த மாத்திரத்திலேயே முற்றி விட்டது என்பதுதான் அர்த்தம். இதனை எல்லாம் நோக்குகின்ற பொழுது மொத்தத்தில் எம்மில் ஒரு சிலர் மழைக்குத்தானும் பாடசாலையில் ஒதுங்காமல் வெளிநாடு வந்து விட்டார்களா என எண்ணத் தோன்றுகிறது. ஐரோப்பாவின் முதல் தமிழ் வானொலி என்று கூறிக் கொள்பவர்கள் கூட இப்படியான கேலிக்கூத்துகளுக்கு இடம் கொடுப்பதும், புலம்பெயர் நாடுகளில் பல துன்பங்களுக்கும், மன உளைச்சல்களுக்கும் மத்தியில் வாழும் தமிழர்களிடையே மூட நம்பிக்கைகளை பரப்பு முனைவதும் மிகக் கவலைக்குரிய விடயமாகும்.

சந்திரமுகியும், சந்திரமுகியை சார்ந்தவர்களும் மக்களின் பணத்தில் வயிற்றை வளர்ப்பதோடு நின்று விடாது, மூட நம்பிக்கைகளை வளர்த்து எமது இனத்தை அழிவுக்கே இட்டுச் செல்கிறார்கள்.

என்னுடைய அடுத்த கடிதத்தில் டென்மார்க் சந்திரமுகியை நம்பி உயிர் போன பக்தனின் கதையையும், ஜேர்மன் ஆஞ்சனேய பக்தனின் திருவிளையாடல்களையும் எழுதுகிறேன்.

உங்களின் தளம் மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்


ரூபி (ஜேர்மனி)

 


 

 

வணக்கம் சபேசன்,

நீங்கள் 10.02.06 அன்று எழுதிய "என்ன செய்யப் போகிறார் வைகோ" படித்தேன். ஆச்சரியப்படும் வண்ணம் மிகவும் தெளிவான முறையில் தமிழ்நாட்டு அரசியலைப் பற்றி அறிந்து வைத்திருக்கின்றீர்கள். உங்களின் மற்றைய கட்டுரைகளையும் வாசிக்கும் பொழுது, நீங்கள் நேர்மையான, பண்பான ஒரு சிறந்த அரசியல் ஆய்வாளர் என்பது தெரிகிறது. பல விடயங்களில் மிகச் சரியாக எதிர்வு கூறுவது வியக்க வைக்கிறது. உங்கள் இணையத்தளமும் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைவதையும் கவனித்து வருகிறேன். இதே போன்று இதே பாதையிலேயே நீங்கள் தொடர்ந்து பயணிக்க வேண்டும். உங்கள் சிறப்பான எழுத்துக்களின் மூலம் நீங்கள் உலகில் சரியான முறையில் அடையாளம் காணப்படுவீர்கள். உங்களின் இணையத்தள வளர்ச்சிக்கு என்னால் முடிந்த பங்களிப்பை வழங்குவேன்.

கே.கே. மூர்த்தி (தமிழ்நாடு)

 



 

சபேசன் அவர்களே,
நீர் ஒரு மனநோயாளி.சரியான மனநோய் வைத்தியரை சந்தித்து பரிசோதித்து சிறந்த வைத்தியம் செய்தால் குணமடைய வாய்ப்பு உண்டு. பண உதவி ரிபிசி வானொலி நேயர்கள் புரிவார்கள். உம்மை மனநோயாளியாக கருத காரணம் என்ன என்பதை என்னுடன் தொடர்பு கொண்டால் விபரமாக தெரிவிப்பேன்.

ரகு (கனடா)

 

 


 


வணக்கம் சபேசன்!

தங்களின் ஜெயதேவனுக்கான பகிரங்க கடிதம் யாழ்களத்தில் பார்த்தேன்! தங்களின் கடிதத்தில் சில உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பதும், நாங்கள் உண்டியலான் என்று செல்லமாக அழைக்கும் ஜெயதேவனை சில சந்தர்ப்பங்களில் உச்சி குளிரப் புகழப்பட்டிருப்பதும் கவனிக்கக் கூடியதாக இருந்தது. இதோ உங்கள் கடிதத்திலிருந்து ....

மேற்கோள்:
-எமது தேசிய விடுதலை இயக்கத்திற்காக நீங்கள் நிறைய பாடுபட்டிருக்கிறீர்கள்
-என்னுடைய நாடு உங்கள் மீது ஒரு சில தவறான குற்றச்சாட்டுகளை வைத்து விசாரித்தது
-உங்களின் பெயரில் இருந்த கோயிலை கட்டாயப்படுத்தி எழுதி வாங்கியதாக சொல்கிறீர்க