வணக்கம்,

உலகிலே உள்ள ஆயிரக்கணக்கான தமிழ் இணையத்தளங்களில் ஒன்றாக நாங்களும் இணைவதில் பெருமையடைகிறோம். எழுத்துப்பணியில் உள்ள தணியாத தாகமும் விடுதலை போராட்டத்திற்கான ஆதரவை உரத்து ஒலிக்கவேண்டும் என்கின்ற ஏக்கமும் எம்மை இந்த இணையத்தளத்தை உருவாக்க தூண்டியது.
 

ஒன்றை இப்பொழுதே தெளிவாக சொல்லிவிடுகின்றோம். நாம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழத்தை அமைப்பதற்கான போராட்டத்தை மனதார ஆதரிக்கின்றோம். நாதியின்றி அலையும் தமிழனுக்கென்று தற்போது ஒரு நாடு அமையும் சாத்தியம் இலங்கைத்தீவிலேயே உள்ளதென்றும் உலகத் தமிழர்களின் தலைவராக உள்ள திரு பிரபாகரன் அவர்களால் மட்டுமே அதை அமைக்க முடியும் என்றும் நாம் முற்று முழுதாக நம்புகின்றோம்.
 

எமது ஆதரவு என்பது காரணம் புரியாமல் மந்தைத்தனமாக கொடுக்கின்ற ஆதரவு அல்ல. உணர்வுபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் கொடுக்கின்ற ஆதரவு. அதே வேளை ஆதரிக்கின்றோம் என்பதற்காக செய்திகளை நாம் திரிவுபடுத்தமாட்டோம். உண்மையான செய்திகளை தருவோம். ஆனால் அதே நேரம் விடுதலைப் புலிகள் மீது களங்கம் கற்பிக்கின்ற அவர்களை கொச்சைப்படுத்துகின்ற எந்தவொரு பொய்யான செய்திக்கும் எம் தளத்தில் இடமில்லை.
 

தமிழை வளர்க்க வேண்டும் என்கின்ற நோக்கத்தில் முடிந்தவரை தூய தமிழில் எழுத முயற்சிப்போம். ஆரம்பத்தில் சில வடமொழிக் கலப்புக்களை எம்மால் தவிர்க்க முடியவில்லை. வெகுவிரைவில் இதை மாற்றியமைப்போம். இதற்கு அகிலமெங்கும் வாழும் தமிழ்மொழி வல்லுனர்களை உதவும்படி கேட்கின்றோம்.
 

எமது இணையத் தளம் மூடநம்பிக்கைகளை தகர்த்தெறிவதற்கு பாடுபடும். தமிழினத்தை விழிப்படைய செய்ய வைக்கின்ற நல்ல ஆக்கங்களை தருபவர்களுக்கு நாம் இடமளிப்போம்.
 

ஆக்கங்களையும் விமர்சனங்களையும் அனுப்பி எமக்கு ஊக்கமும் உற்சாகமும் வழங்குங்கள்.

நன்றி

 


 

கவனத்திற்கு...

எமது இணையத்தளமானது பல தளங்களின் இணைப்பைக் கொண்டிருக்கிறது.  இந்த தளங்களின் உள்ளடக்கங்களுக்கு நாம் எந்த விதத்திலும் பொறுப்பாளிகள் அல்ல. இந்த இணையத் தளங்களை எம்முடைய பார்வைக்கு ஏற்றவாறு வகைப்படுத்தியுள்ளோம். இதில் அந்த தளங்களின் பொறுப்பாளர்களுக்கு வேறு கருத்து இருக்குமாயின் தயவுசெய்து அறியத் தாருங்கள்.  மாற்றியமைக்க நாம் தயாராகவுள்ளோம்.

எம்முடைய இணைப்பில் மேலும் பல தளங்களை இணைக்க விரும்புகிறோம். வேறு பல நல்ல தளங்கள் இருப்பின் அறியத்தாருங்கள்.

எம்முடைய தளத்தில் வரும் ஆக்கங்களை மறுபிரசுரம் செய்வது குறித்தும் சில விடயங்களை தெரியப்படுத்துகிறேhம். மறுபிரசுரம் செய்ய எம்முடைய அனுமதி ஒன்றும் தேவையில்லை. எந்த மாற்றமும் செய்யாமல் முழுமையாக ஆக்கதாரரின் பெயரோடு மறுபிரசுரம் செய்யலாம். ஆக்கத்தோடு எமது இணையத்தளத்தின் பெயரையும் குறிப்பிட வேண்டும் என்று நாம் அடம்பிடிக்கவில்லையாயினும்,  அவ்வாறு  குறிப்பிடுவது விரும்பத்தக்கது.