சாவு வீட்டில் நடந்த காட்டுமிராண்டித்தனம்!![]()
அந்த ஊடகவியலாளர் நடந்த சம்பவங்களை ஊடகங்கள் மூலம் வெளிக் கொணர்ந்திருந்தார். இதை அடுத்து அவர் சிலரால் மிரட்டப்பட்டார். மர்ம தொலைபேசி அழைப்புக்கள் மூலம் தொல்லைப்படுத்தப்பட்டார்.
டென்மார்க்கில் தன்னை அம்மன் என்று சொல்லி மக்களை ஏமாற்றுகின்ற அபிராமி எனப்படும் லலிதா என்கின்ற பெண்மணியை கடவுள் என்று உண்மையிலேயே நம்புகின்ற பலர் ஐரோப்பாவில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவரை வாழும் தெய்வம், நடமாடும் தெய்வம் என்றெல்லாம் போற்றிப் புகழ்கிறார்கள்........
ஒரு சிறிய குடிலைப் போட்டுக் கொண்டு லலிதா தன்னை "சின்ன அம்மன்" என்று சொல்லிக் கொண்டு உரு ஆடத் தொடங்கினார். ஏழாலையில் உள்ள பெரும்பாலான மக்கள் லலிதாவை கண்டுகொள்ளவில்லை. ஆனாலும் அயலூர்களில் இருந்து சிலர் "சின்ன அம்மனிடம்" குறி கேட்கச் சென்றனர்..........
புதிய கோசங்களோடு புதிய முகங்கள்!
அண்மையில் சில இணையத்தளங்களில் வெளிவந்த உதைபந்தாட்ட நிகழ்வுக்கான
விளம்பரம் ஒன்று எமது கவனத்தை ஈர்த்தது. "சிறிலங்காவிலும் தமிழீழத்திலும்
சமாதானத்திற்கான உதைபந்தாட்டம்" என்ற தலைப்பில் அந்த விளம்பரம் காணப்பட்டதே
அதற்கு காரணம். .......
குகநாதன் பொதுவாக விடுதலைக்கு ஆதரவானவர் என்றே பெரும்பாலானோரல் அறியப்பட்டிருந்தவர். அவர்களுக்கு குகநாதனுடைய இந்த புதிய அவதாரம் ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கிறது. ஆனால் குகநாதனோடு நெருக்கமாக பழகியவர்களுக்கு குகநாதனுடைய இந்த மாற்றம் ஆச்சரியம் எதையும் கொடுக்கவில்லை................
டென்மார்க் கத்தோலிக்க திருச்சபையின் அத்துமீறல்!
எமது தமிழீழ உறவுகளுக்கு நீதியோடு கூடிய சமாதானமும், வெற்றியும்
விடுதலையும் கிடைக்க வரம் வேண்டி திரு ராசா மரியா பெர்னாண்டா ஒளியை ஏற்றி வைப்பார்
என்று அறிவிப்பாளர் கூறி அவரை அழைத்தார். ஆனால் அவருக்கு வழங்கப்பட்ட "பட்டம்"
விடயம் புரிந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும்............
அன்றும் அவர் வழமை போன்று கிணற்றில் தண்ணீர் எடுத்தார். அப்பொழுது அயலவன் ஒருவன் ஓடி வந்தான். வந்தவன் ஆசிரியரை ஓங்கி கன்னத்தில் அறைந்தான். ஆசிரியரின் சாதிப் பெயரை சொல்லித் திட்டி தண்ணீர் எடுப்பதை தடுத்தான். அதுவரை அவரை "மாஸ்ரர்" என்று மரியாதையாக அழைத்த அயலவன்தான் விடுதலைப்புலிகள் இல்லையென்றதும் அப்படி நடந்து கொண்டான்.........
ரிபிசி மீது மீண்டும் தாக்குதல்!
ரிபிசி வானொலி நிலையம் நேற்று இரவு (24.11.06) தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு நிகழ்ச்சிகள் முடிந்து அனைவரும் சென்ற பிறகு சிலர் உள் நுளைந்து அங்கிருந்த கருவிகளை அடித்து சேதப்படுத்தியதாக தெரிய வருகிறது. இதனால் ரிபிசி வானொலி சில நாட்கள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது..........
தொலைபேசியில் உரையாடுவது, பிபிசி கேட்பது போன்ற நேரங்களை தவிர அவருடைய பொழுது போக்கு என்பது புத்தகங்கள் படிப்பதாக இருக்கிறது. அவர் படிக்கின்ற புத்தகங்களை கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் எழுதிய "போரும் சமாதானமும்", அடேல் பாலசிங்கள் எழுதிய "சுதந்திர வேட்கை" ஆகிய புத்தகங்களையே தற்பொழுது வாசித்துக்கொண்டிருக்கிறார். இவைகளை விட இடதுசாரி சிந்தனைகளை உள்ளடக்கிய புத்தகங்களையும் அவர் வாசிக்கின்றார்..........
தங்களை வெளிப்படையாக இனம் காட்டாது மறைந்திருந்து தேசியத்திற்கு எதிராக செயற்படுபவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். சமூக சேவையாளர்கள் போன்று வெளிப்பார்வைக்கு தோற்றம் அளிப்பர்கள். இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பது போன்று நடந்து கொள்வார்கள். ஆனால் உண்மையில் சொந்த இனத்தின் இரத்தத்தையே குடிப்பவர்களாக இருப்பார்கள். இவர்களில் பலர் கலைவிழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் என்று நடத்திக் கொண்டிருப்பர்கள்.........
ஜானின் கொலையில் உள்ள மர்மங்கள்!
அல்லைப்பிட்டி, வங்காலை, கெப்பிட்டிக்கெல்ல, பேசாலை என்று பல கொலைகளைப் புரிந்த இராணுவத்தின் பிரதம தளபதியான மகிந்தராஜபக்ஷவின் இரத்தக் கறை படிந்த கரங்களை குலுக்கி விட்டு வந்திருக்கிறேன் என்று கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் சொன்னார். அந்த நேரத்தில் மற்றவர்கள் அவரை அம்மணமாக்க வேண்டிய அவசியம் இன்றி ஜெயதேவன் தன்னைத்தானே அம்மணமாக்கிக் கொண்டார்.......
அரசியல் விவாதம் நடந்து கொண்டிருந்த பொழுது சில இளைஞர்கள் தமது கலையகத்திற்குள் புகுந்து குழப்பம் விளைவித்ததாக ரிபிசி வானொலி பின்பு அறிவித்தது. விவாதத்தில் கலந்து கொண்டிருந்த விவேகானந்தன் என்பவரை கொலை செய்ய முயற்சித்ததாக ஒரு திடுக்கிடும் குற்றச்சாட்டையும் இளைஞர்கள் மீது சுமத்தியது. வந்தவர்களை விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்றும் சொன்னது....
விமர்சனங்கள் குறித்த விசமத்தனமான கேள்விகள்!
எழுத்தாளர் ஒன்றியம்
குறித்தோ, அதில் உள்ளவர்கள் குறித்தோ நான் இப்பொழுது எழுத வரவில்லை. இந்த
விவாதங்களின் பொழுது ஒரு விடயம் என் மனதை உறுத்தியது. எழுத்தாளர்கள் என்று
சொல்பவர்கள் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதற்கும் சகித்துக் கொள்வதற்கும் பக்குவம்
இன்றி நடந்து கொண்டது வேதனையை தந்தது.
லண்டனில் ஈழபதீஸ்வரன் ஆலயத்தின் முன்னால் ஒரு ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது. ஈழபதீஸ்வர ஆலயத்தை ஒரு கம்பனியாக பதிவு செய்திருப்பதையும், கோயிலை வைத்து மக்களை ஏமாற்றுவதையும் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தை சிலர் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
டென்மார்க் விழாவால் விழாது இருப்பீர்!
கொள்கைப் பிடிப்பின்றி வெறும் பொழுது போக்குக்காகவும் பணம் ஈட்டுவதற்காகவும் விழாக்களை நடத்துகின்றவர்களை அணுகிய சிறிலங்கா தூதரக அதிகாரிகள் விழாக்களுக்கு நிதி உதவி செய்யத் தயாராக இருப்பதாக தூண்டில் போட்டனர். ஒரு சில விழாக்கள் சிறிலங்கா தூதரகத்தின் நிதி உதவியுடன் நடந்தன.......
டென்மார்க் விவகாரங்களின் பின்னணி!
டென்மார்க்கில் வாழுகின்ற குமாரதுரையை ரிபிசி வானொலியை கேட்பவர்கள் அறிந்திருப்பார்கள். இவருக்கு பல பிள்ளைகள் பிறந்து, அவர்கள் குமாரதுரையைப் போலவே இருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான செயற்பாடுகளை செய்து வந்தாலும், இதில் மதி மற்றும் வதனன் எனப்படும் இரண்டு மகன்களுமே மிக அதிகமான துரோக வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள்......
ரிபிசியை சார்ந்தவர்கள் அர்த்தமற்ற குற்றச்சாட்டை வெப்ஈழத்தின் மீது வைக்கின்றார்கள். அத்துடன் கடுமையான வார்த்தை பிரயோகங்களை செய்கின்றார்கள். ஜெயகநாதன் தெருநாய் என்று ஆரம்பித்து வைத்தது கலைச்செல்வி என்ற பெண்மணியின் வாயில் கூவம் என்று வந்து நிற்கிறது.......
வழமை போன்று இன்றும், விடுதலைப்
போராட்டத்திற்கு எதிரான இணையத் தளங்களைப் பார்வை இட்டேன். நடந்த முடிந்த
உள்ளுராட்சி தேர்தல்கள் பற்றி அவைகளின் கருத்துக்களை அறிகின்ற ஆவலோடு பார்த்தேன்.
என்ன ஆச்சரியம்? உள்ளுராட்சி தேர்தல் பற்றி செய்திகளோ, கருத்துக்களோ எதிலும் இல்லை.....
புலத்தில் தமிழ் ஊடகங்கள் !?!?!? - கணோன்
கடந்த மாதத்தில் சில வாரங்களாக "ஐ.பி.சி" வானொலியில் பிரதி திங்கள் இரவு தோறும் நடைபெறும் "பஞ்சாயத்து" நிகழ்ச்சியில் "தமிழர்கள் விழிப்பாக இருக்க வேண்டியது எதிரிகளிடமா? அல்லது துரோகிகளிடமா?" என்ற தலைப்பில் நேயர்களின் கருத்தாடல் இடம்பெற்றது. ஏறக்குறைய மூன்று வாரங்களாக தொடர்ந்த கருத்தாடலில், தொன்னூற்றி ஒன்பது விழுக்காட்டைச் சேர்ந்த நேயர்கள் "துரோகிகளிடமே தமிழர்கள் விழிப்பாக இருக்க வேண்டும்" எனும் கருத்தை ஆதாரங்களுடன் ஆழமாக வலுயுறுத்தினார்கள்.......
"சில வினாடிகள் ஜெயதேவனுடன்" - கணொன்
நீங்கள் இன்று, கட்சி எனும் பெயரில் கூடியிருக்கும் கும்பல்கள், ஈழத்தில் இந்திய இராணுவ காலங்களில் கொலைகள், கொள்ளைகள், கற்பளிப்புகள், பிள்ளை பிடிப்புக்கள் செய்துவிட்டு, அங்கிருந்து இந்தியா தப்பியோடிய பின் மேற்கத்தேய நாடுகளில் ஆட்கடத்தல்கள், போதைவஸ்து கடத்தல்களில் ஈடுபட்டவர்களோ/ ஈடுபட்டிருப்பவர்களோ தான் உங்களது கட்சியின் உள்ள தோழர்கள்!! மக்களால் அருவருக்கப்பட்டு ஒதுக்கப்பட்டவர்கள்தான், உங்களோடு இன்று கை கோத்திருக்கிறார்கள்!!
சிறையில் ராம்ராஜ் - சில சிந்தனைகள்!
ரிபிசியின்
பணிப்பாளர் சுவிஸ் நாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தமிழீழ
தேசியத்திற்கு எதிராக நடத்தப்பட்ட ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்த பொழுது
சுவிஸ் பொலிஸார் அவரை கைது செய்தனர். நேற்று (23.02.06) ரிபிசியின் அரசியல்
விவாதம் ரிபிசியின் பணிப்பாளர் ராம்ராஜ் இல்லாமலேயே நடைபெற்றது.........
விடுதலைப்புலிகளை கண்மூடித்தனமாக ஆதரிப்பது
தவறு என்று சிலர் சொல்வார்கள். அது போன்று கண்மூடித்தனமாக எதிர்ப்பதும்
தவறல்லவா? விடுதலைப்புலிகளை எதிர்க்க வேண்டும் என்பதற்காக தமிழினத்தின்
தாயகக் கோட்பாட்டில் கை வைப்பதை எப்படி ஏற்றுக் கொள்வது? விடுதலைப்புலிகளின்
கருத்துக்களை ஏற்காது மாற்றுக்கருத்து கொண்டிருப்பதில் ஒன்றும் தவறில்லை.
அவ்வாறு கருத்துக் கொண்டிருப்பவர்களை துரோகிகள் என்று சொல்வதிலும் எனக்கு
உடன்பாடில்லை. ஆனால் தமிழினத்தின் தாயகத்தை நிராகரிப்பதும்,
நிராகரிக்கின்றவர்களுக்கு வக்காலத்து வாங்குவதையும் துரோகம் என்று சொல்லாது,
வேறு எப்படி சொல்ல முடியும்?.....
உலகம் முழுவதும் முஸ்லீம் என்கின்ற பதம் ஒரு மதத்தை குறிக்கப் பயன்படுத்துகின்ற பொழுது இலங்கையில் வாழுகின்ற இஸ்லாமை மதமாகக் கொண்ட தமிழர்களை மட்டும் நாங்கள் முஸ்லீம்கள் என்று அழைத்தால் மற்றைய முஸ்லீம்கள் உண்மையான முஸ்லீம்கள் இல்லையென்று சொல்வது போல் ஆகிவிடாதா? இதை பசீர்தான் விளக்க வேண்டும். மற்றைய தமிழர்களிடம் இருந்து தாங்கள் வேறுபட்டவர்கள் என்று நினைத்தால், தங்களை பிரித்துக் காட்ட விரும்பினால் அதற்கு ஒரு மதத்தை குறிக்கப் பயன்படுத்தும் சொல்தானா கிடைத்தது?........
ரிபிசியில் நடந்த விவாதத்திற்கு என்னுடைய விளக்கம்!
இப்பொழுது ரிபிசி வானொலியில் நடந்த சில உரையாடல்கள் சம்பந்தமாக சில கருத்துக்களை முன் வைக்கின்றேன். ஜெகநாதன் என்பவர் என்னை "தெருநாய்" சொறிநாய்" என்றெல்லாம் வசைபாடிச் சென்றார். "எமது வானொலியில் நாகரீகமாக பேச வேண்டும்" என்று அடிக்கடி கூறுகின்ற ராம்ராஜ் அவர்கள் அதைக் கேட்டுக்கொண்டு மௌனமாக இருந்தார்............
ஜெயதேவனிற்கு ஒரு பகிரங்கக்
கடிதம்!
நீங்கள் தடுத்து வைக்கப்பட்ட பொழுது நீங்கள் பட்ட மன உளைச்சல்களை நான் மறுத்துப் பேச வரவில்லை. உங்கள் உணர்வுகளை வேதனைகளை நான் புரிந்துகொள்கிறேன். "இவர்களுக்காக இவ்வளவு பாடுபட்டோமே, என்னைப் போய் தடுத்து வைத்திருக்கிறார்களே" என எண்ணி எண்ணி வேதனைப்பட்டிருப்பீர்கள்......
துரோகிகளின் வன்முறைகளும் எதிர்வன்முறைகளும்!
இந்த வக்கிரத்திற்குப் பெயர்தான் வன்முறைகளற்ற ஜனநாயகமா? தமிழர்களுக்காக பணியாற்றுபவர்களை வேளியேற்றுவோம் என்பதும் எங்களுக்காக மரணித்தவர்களை நினைவுகூரவிடாமல் தடுப்போம் என்பதும்தான் ஜனநாயகமா? என் மொழியைப் பேசுகின்ற துரோகிகளே! ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள். ஒரு இனத்தையே நாடில்லாமல் காலம் காலமாக அலைய விடவேண்டுமென்று நினைப்பதும் அதற்காக முழுமூச்சாக வேலை செய்வதும் எவ்வளவு பெரிய வன்முறை?.....