Www.Webeelam.Com

16.05.08
கொழும்பில் காவல்துறை வாகனம் மீது குண்டுத் தாக்குதல் - 9 பேர் பலி - 95 பேர் காயம்

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.05 மணிக்கு குண்டுத்தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்திற்கு அண்மையில் ஹில்டன் விடுதிக்கு முன்பாகவே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. கலகத்தடுப்பு காவல்துறையினரை ஏற்றிச்சென்ற பேருந்து தொடரணியை இலக்கு வைத்து இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளர்.

இதில் 9 காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர். 95 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

காவல்துறையினரை ஏற்றிச்சென்ற வாகனம் ஒன்றின் மீது உந்துருளி ஒன்று மோதியதனை அடுத்தே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாகவும் கொல்லப்பட்டவர்களில் 7 பேர் காவல்துறை அதிகாரிகள் என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. சம்பவ இடத்தில் பலர் காயமடைந்து வீழ்ந்து கிடக்கின்றனர்

குண்டுவெடித்த பகுதி முக்கிய பிரமுகர்களின் நடமாட்டம் அதிகம் உள்ள இடமாகும். இப் பகுதிய அதிஉயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகை சம்பவ நடந்த இடத்திற்கு அருகிலேயே உள்ளது.
இப் பகுதில் குண்டுவெடித்துள்ளதை அடுத்து அங்கு கடும் அதிர்ச்சியுமு; பதற்றநிலையும் காணப்படுகிறது. அப்பகுதியில் பெரும் தொகையான படையனர் குவிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் சிதறிய நிலையில் முச்சக்கர வாகனம் ஒன்றும் உந்துருளி ஒன்றும் காணப்படுகின்றது. இதனை விட காவல்துறையினரின் பேருந்துகள் இரண்டும், பார ஊர்தி ஒன்றும் மேலும் சில முச்சக்கர வாகனங்களும் கடுமையாகச் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன.

 

16.05.08
மாகாண சபை மூலம் கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட முடியாது: விக்கிரமபாகு கருணாரட்ண

கிழக்கில் தனியான மாகாணசபையொன்றை அமைப்பதன் மூலம் கிழக்கு மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு எந்த வகையிலும் தீர்வு பெற்றுக் கொடுக்க முடியாது என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். எனவே எதிர்காலத்தில் பல்வேறு குழப்ப நிலைமைகள் உருவாக இந்த மாகாணசபை வழிகோலும் என அவர் பேட்டி ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிழக்கில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்படுவதன் மூலம் தமிழ் இராச்சியமொன்று உருவாகும். அந்த இராச்சியம் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கக்கூடிய ஓர் அலகாக செயற்படும் எனவும் தெரிவித்துள்ள விக்ரமபாகு கருணாரத்ன, தமிழ் இராச்சியமொன்றுக்கு ஜனாதிபதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, தமக்கு எதிரான தமிழ் இராச்சியமொன்றுக்கே அவர் எதிர்ப்பு தெரிவிக்கின்றார் என சுட்டிக்காட்டியுள்ளார்.

கிழக்கு வளங்களை சுரண்டி சர்வதேசத்தின் கைப்பொம்மையாக பிள்ளையான் செயற்படும் வரை அரசாங்கத்திற்கும் பிள்ளையானுக்கும் இடையிலான உறவு மிக வலுவானதொன்றாகக் காணப்படும் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நடைபெற்ற மிக மோசமான ஊழல் நிறைந்த தேர்தலாகவே கிழக்குத் தேர்தல் அமைந்துள்ளது. பாரியளவிலான சம்பவங்களோ வன்செயல்களோ பதிவாக போதிலும் தேர்தல் கொள்ளையில் அரசாங்கம் ஈடுபட்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார். இந்த வரலாற்று தவறுக்கு ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோரும் உடந்தையாக செயற்பட்டுள்ளனர் என இந்தப் பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளையான் குழுவினருக்கு 12 முகாம் இருப்பதாகவும், பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் இடம் பெறுவதாக குறிப்பிட்ட ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் மறைமுகமாக இந்தத் தேர்தல் கொள்ளைக்கு உடந்தையாக செயற்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ரவூப் ஹக்கீம் எதிர்காலத்தில் மீண்டுமொருமுறை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஹிஸ்புல்லா அரசாங்கத்துடன் இணைந்து கிழக்கில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தால் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட முஸ்லிம்களுக்கு கிழக்கில் உள்ள செல்வாக்கு குறைவடையும் இந்த நிலைமையை ரவூப் ஹக்கீம் ஏற்றுக்கொள்ள மாட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் வெகுவிரைவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ரவூப் ஹக்கீம் இணைவதை நாம் காணக்கூடியதாக இருக்கும் என அவர் எதிர்வுகூறியுள்ளார். கிழக்குத் தேர்தல்களின் போது ஜே.வி.பி.யின் முகத்திரையும் கிழித்தெறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்குத் தேர்தல்களின் மூலம் தமிழ் முஸ்லிம் பிரிவிணைவாதம் மிகவும் மோசமான வகையில் தூண்டப்பட்டுள்ளதாகவும், இந்த நிலைமை எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கிழக்கில் தனியான மாகாணசபையொன்றை அமைப்பதன் மூலம் கிழக்கு மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு எந்த வகையிலும் தீர்வு பெற்றுக் கொடுக்க முடியாது என கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். எனவே எதிர்காலத்தில் பல்வேறு குழப்ப நிலைமைகள் உருவாக இந்த மாகாணசபை வழிகோலும் எனவுமட அவர் தனது பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

15.04.08
ஐரோப்பிய நாடொன்றில் அரசியல் தஞ்சம் கோர கருணா திட்டம்?

லண்டன் குடிவரவுத் திணைக்கள தடுப்புக் காவல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கருணாவை திருப்பியனுப்புவதற்கான நடவடிக்கைகளை பிரித்தானிய அதிகாரிகள் மேற்கொண்டால், மற்றொரு ஐரோப்பிய நாட்டில் தஞ்சம் புகுவதற்கு அவர் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகின்றது. லண்டனிலும், ஐரோப்பாவிலுமுள்ள கருணாவுக்கு நெருக்கமான சிலர் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். கொழும்புக்கு அவர் திருப்பியனுப்பப்பட்டால், அங்கு வருவதற்குப் பதிலாக ஐரோப்பிய நாடொன்றில் அரசியல் தஞ்சம் கோரி அவர் செல்லலாம் எனத் தெரிகின்றது.

இதேவேளையில், லண்டன் குடிவரவுத் திணைக்களத்தின் தடுப்புக்காவல் முகாமில் வைக்கப்பட்டுள்ள கருணா கொழும்புக்குத் திருப்பி அனுப்பப்பட்டால், உள்நாட்டுச் சட்டங்களின் அடிப்படையிலேயே அவர் மீதான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என சிறிலங்கா அரசாங்கப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்திருக்கின்றார்.

கருணா திருப்பி அனுப்பப்படலாம் என்ற செய்தியை ஊடகங்கள் மூலமாக மட்டுமே தான் அறிந்திருப்பதாகத் தெரிவித்த அமைச்சர், கருணா திருப்பியனுப்பப்பட்டால் சட்டப்படி அவர் கையாளப்படுவார் எனவும் குறிப்பிட்டார். கொழும்பு வந்தவுடன் கருணா கைது செய்யப்படுவாரா எனக் கேட்கப்பட்ட போது, அதனையிட்டு தான் எதுவும் கூறமுடியாது எனத் தெரிவித்த அமைச்சர் ரம்புக்வெல, அது தொடர்பான முடிவை எடுக்கும் அதிகாரம் தன்னிடம் இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

குடிவரவுச் சட்டத்தை மீறியமை மற்றும் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்பட்ட கருணா, சிறைச்சாலையிலிருந்து கடந்தவாரம் விடுதலை செய்யப்பட்டார். தற்போது குடிவரவுத் திணைக்கள தடுப்புக்காவல் முகாம் ஒன்றில் கருணா தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றார்.

15.04.08
புலிகள் மூழ்கடித்த கப்பலை மீட்க கடற்படை சுழியோடிகள் தீவிர முயற்சி

விடுதலைப் புலிகள் அமைப்பினால் அண்மையில் திருகோணமலை துறைமுகத்தில் வைத்து மூழ்கடிக்கப்பட்ட கப்பலை மீட்டெடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இத்தாக்குதலுக்கு கடற்புலிகள் பயன்படுத்திய நீச்சல் உடைகளின் பாகங்களை கடற்படையின் சுழியோடிகள் கண்டுபிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடற்புலிகளின் நீரடி நீச்சல் பிரிவினரால் கடந்தவாரம் திருகோணமலை துறைமுகத்தில் வைத்து மூழ்கடிக்கப்பட்ட கடற்படையின் விநியோகக் கப்பலான எம்.ஐ.இன்விசிபிள் மூழ்கடிக்கப்பட்டது. இதனை மீட்கும் பணிகள் சிறிலங்கா கடற்படையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் விடுதலைப் புலிகள் எவ்வாறான உபாயத்தைப் பயன்படுத்தி இக்கப்பலைத் தகர்தார்கள் என்பதை அறிவதிலும் கடற்படையினர் ஆர்வமாக உள்ளனர்.

24 மணி நேரமும் சுழியோடிகள் கப்பலை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. கப்பலை வெடிக்கச் செய்ய விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் பயன்படுத்திய நீச்சல் உடைகளை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நீர்க்குமிழிகள் மேலே எழாத வகையிலான விசேட நீச்சல் உடைகளை குறித்த கடற்புலி உறுப்பினர் பயன்படுத்தியுள்ளதாக கடற்படையைச் சேர்ந்த உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்

விடுதலைப் புலிகள் கடந்த சனிக்கிழமை அதிகாலை நடத்திய இத்தாக்குதலில் குறிப்பிட்ட கப்பல் மூழ்கடிக்கப்பட்ட அதேவேளையில், காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அனுப்பிவைத்தற்கான தயார் நிலையில் பெருமளவு ஆயுதங்களும் அதில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடற்புலிகளின் கங்கை அமரன் நீரடி நீச்சல் படைப் பிரிவைச் சேர்ந்த கரும் புலிகளே இத்தாக்குதலை நடத்தியதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தனர்.

 

 

14.05.08

ஹிஸ்புல்லாவிற்கு முதலமைச்சர் பதவி வழங்காவிட்டால் அரசில் இருந்து வெளியேறுவோம் - முஸ்லீம் அமைச்சர்கள் எச்சரிக்கை


கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவிக்காக பிள்ளையானுக்கும், ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான போட்டி முடிவின்றித் தொடர்கின்ற அதேவேளையில், ஹிஸ்புல்லாவுக்கே இந்தப் பதவி வழங்கப்பட்ட வேண்டும் என முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் கோரிக்கை முன்வைத்திருக்கின்றார்கள். இல்லையென்றால் தாம் அனைவரும் அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டி வரும் எனவும் அவர்கள் கடுமையாக எச்சரித்திருக்கின்றார்கள்.


அமைச்சரும் அரசாங்கத் தரப்பு நாடாளுமன்றக் குழுத் தலைவருமான நிமால் சிறிபால டி சில்வாவை நேற்று செவ்வாய்கிழமை மாலையில் சந்தித்த 12 முஸ்லிம் அமைச்சர்களின் குழு ஒன்று கிழக்கு மாகாணத்துக்கான முதலமைச்சரை நியமிப்பதில் தோன்றியுள்ள நெருக்கடி நிலை தொடர்பாக விரிவான முறையில் ஆராய்ந்தனர். அந்த வேளையிலேயே இந்தக் கோரிக்கையை அவர்கள் முன்வைத்ததாக அரசாங்க வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.


தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வழங்கிய உறுதி மொழியின் அடிப்படையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முஸ்லிம்களே அதிகளவு ஆசனங்களைப் பெற்றிருப்பதால் ஹிஸ்புல்லாவுக்கே இந்தப் பதவி வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியிருக்கின்றார்கள். முதலமைச்சர் பதவி தொடர்பாக உருவாகியிருக்கும் இந்த இழுபறி நிலை காரணமாக இன்று கொழும்பில் நடைபெறவிருந்த முதலமைச்சர் பதவியேற்பு வைபவம் ஒத்திவைக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


அரசாங்கத்திலிருந்து விலகிக்கொள்வதென்பது ஒரு மாற்றுத் திட்டமாகவே இருக்கின்றது. இருந்தபோதிலும் கிழக்கு மாகாண மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதி பாதுகாப்பார் என நாம் நம்புகின்றோம் எனத் தெரிவித்த உல்லாசப் பயணத்துறை பிரதி அமைச்சர் ஹ_செய்ன் பைலா, கிழக்கு மாகாண மக்களுடன் செய்மதி தொலைக்காட்சி மூலம் உரையாடிய ஜனாதிபதி, கிழக்கு மாகாண சபைக்கு முஸ்லிம்கள் அதிகளவில் தெரிவு செய்யப்பட்டால் ஹிஸ்புல்லா முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என உறுதியளித்திருந்தமையையும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.


சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸில் முக்கிய பதவியிலிருந்த ஹிஸ்புல்லாவை ஆளும் கட்சிக்கு இழுத்தெடுப்பதற்காக நடைபெற்ற பேரம் பேசல்களில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா முக்கிய பங்காற்றியவர் என்ற அடிப்படையிலேயே அவருடன் முஸ்லிம் அமைச்சர்கள் இது தொடர்பாகப் பேச்சுக்களை நடத்தியிருக்கின்றார்கள். அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு இது தொடர்பாக எழுத்து மூலமான கோரிக்கை ஒன்றைச் சமர்ப்பித்துள்ள முஸ்லிம் அமைச்சர்கள், தேர்தலுருக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் ஹிஸ்புல்லா முதலமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருக்கின்றார்கள்.


இது ஹிஸ்புல்லாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையிலான ஒரு தனிப்பட்ட பிரச்சினையல்ல. இது மாகாண சபைக்கு அதிகளவுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள முஸ்லிம் சமூகத்தின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துவது தொடர்பிலான ஒரு விடயமாகும் என மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் அப்துல் றிசாட் பதியுதீன் தெரிவித்திருக்கின்றார். கிழக்கு மாகாண சபைக்கு எட்டு உறுப்பினர்களை ஆளும் கட்சிக்கு முஸ்லிம்களே பெற்றுக்கொடுத்திருப்பதால் ஹிஸ்புல்லாவையே முதலமைச்சராக ஜனாதிபதி நியமிப்பார்| என உல்லாசப் பயணத்துறைப் பிரதி அமைச்சர் பைசல் முஸ்பதா தெரிவித்தார்.

 

 

12.05.08

கிழக்கு மாகாண முதலமைச்சர் யார்? பிள்ளையான், ஹிஸ்புல்லா கடும் போட்டி


கிழக்கு மாகாண சபைக்கு நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றுள்ளதையடுத்து, இதில் போட்டியிட்ட பிள்ளைனுக்கும், ஹஸ்புல்லாவுக்கும் இடையில் முதலமைச்சர் பதவியை யார் பெற்றுக்கொள்வது என்பதில் கடும் போட்டி ஏற்பட்டிருக்கின்றது. விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு, மாகாண சபைக்குத் தெரிவானவர்களின் பெயர் விபரங்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே இந்த மோதல்கள் தீவிரமடைந்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றால் முதலமைச்சர் யார் என்ற பிரச்சினை தேர்தலுக்கு முன்னரே கிளம்பியிருந்தது. முதலமைச்சர் பதவியைத் தருவதாக பிள்ளையானுக்கும், ஹிஸ்புல்லாவுக்கும் அரசாங்க உயர் மட்டம் ஏற்கனவே வாக்குறுதியளித்திருந்த போதிலும் பின்னர் அந்த நிலைப்பாட்டைம மாற்றிக்கொண்டது. தேர்தலில் அதிகளவு உறுப்பினர்களை எந்தத் தரப்பினர் பெற்றுக்கொள்கின்றார்களோ அவர்களுக்கே முதலமைச்சர் பதவி என ஆளும் கட்சித் தலைமை உத்தியோகபூர்வமாக அறிவித்தது.


இதன்படி மாகாண சபைக்கு விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தெரிவானவர்களின் விபரங்கள் நேற்று மாலை தெரியவந்தது. எட்டு முஸ்லிம்களும், ஆறு தமிழர்களும், நான்கு சிங்களவர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் தெரிவாகியிருக்கும் அதேவேளையில், போணஸ் ஆசனங்கள் இரண்டுக்கும் பிள்ளையான் குழுவின் உறுப்பினர்களை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது. இதன் மூலம் ஆளும் கட்சியின் சார்பில் மாகாண சபைக்குச் செல்லும் தமிழர்களின் எண்ணிக்கை எட்டாக அதிகரிக்கும்.


ஆளும் கட்சியில் முஸ்லிம் உறுப்பினர்களே அதிகளவுக்குத் தெரிவு செய்யப்பட்டிருப்பதால் ஹிஸ்புல்லாதான் முதலமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும் என அவருடைய ஆதரவாளர்கள் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்துள்ள அதேவேளையில், ஆளும் கட்சிக்கு அளிக்கப்பட்டுள்ள மொத்த வாக்குகளில் 75,000 வாக்குகள் தமிழ் வாக்குகளாக இருப்பதால் பிள்ளையானையே அரசாங்கம் முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என அவரது குழுவினர் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.


இந்த நிலைமைகள் தொடர்பாக ஆராய்வதற்காக பிள்ளையான்குழுவின் மத்திய குழு நேற்று மாலை அவசரமாகக் கூடி ஆராய்ந்தது. ~~கிழக்கு மாகாணத் தமிழர்கள் நீண்ட காலமாகவே பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றார்கள். தமிழர் ஒருவர் முதலமைச்சராவதன் மூலமாக மட்டுமே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என அவர்கள் கருதுகின்றார்கள். ஆதனால்தான் அவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களித்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளையான் அதிகப் பெரும்பான்மை விருப்பு வாக்குகளைப் பெற்றமைக்கும் இதுதான் காரணம்|| என இந்தக் கூட்டத்தின் இறுதியில் கருத்து வெளியிட்ட பிள்ளையான் குழுவின் பேச்சாளரான அசாத் மௌலானா தெரிவித்தார்.


முதலமைச்சர் நியமனம் தொடர்பான அரசாங்கத்தின் இறுதித் தீர்மானத்தை தாம் இன்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்த அசாத் மௌலானா, இவ்விடயத்தில் தமிழர்களுக்குச் சார்பான தீர்மானம் ஒன்றை அரசாங்கம் எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருக்கின்றார். மட்டக்களப்பு மாவட்ட விருப்பு வாக்குகளைப் பொறுத்தவரையில் கூட ஹிஸ்புல்லாவை விட பிள்ளையானுக்கே அதிகப்படியான வாக்குகள் கிடைத்திருப்பதையும் இவர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.


இதேவேளையில், கிழக்கு மாகாண முதலமைச்சராக யாரை நியமிப்பது என்பது தொடர்பிலான இறுதி முடிவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே மேற்கொள்வார் எனத் தெரிவித்திருக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான சுசில் பிரேமஜயந்த், இந்த முடிவு இன்றைய தினம் தெரியவரும் எனவும் குறிப்பிட்டார். ~~பிள்ளைனும், ஹிஸ்புல்லாவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சன்னத்திலேயே போட்டியிட்டனர். இதில், தெரிவு செய்யப்பட்ட பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றுக்கொள்ளக் கூடியவரையே அரசுத் தலைவர் முதலமைச்சர் பதவிக்கு நியமிப்பார். ஆரம்பத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் இதன் அடிப்படையிலேயே உள்ளது|| எனவும் அமைச்சர் பிரேமஜயந்த் தெரிவித்தார்.


12.05.08
மீண்டும் ஒரு பயங்கரவாதத்துக்கே கிழக்கு மாகாண தேர்தல் வழிவிட்டுள்ளது: ஜே.வி.பி.


ஜனநாயகத்தை எதிர்பார்த்த கிழக்கு மாகாண மக்களுக்கு அந்த எதிர்பார்ப்பு கை நழுவிப்போய் மீண்டும் புதியதொரு பயங்கரவாதத்திற்கு தேர்தல் வித்திட்டுள்ளது. மிக விரைவில் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவார்கள் என்று ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவித்த போதே விஜித ஹேரத் இவ்வாறு கூறினார்.


இனவாதம், அரசாங்கத்தின் அடாவடித்தனங்கள், ஊடகங்களின் அரசு சார்புத் தன்மை, நிதி போன்ற அதிகாரங்களைப் பயன்படுத்தியே கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடந்தேறியுள்ளது. இத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நாள் தொடக்கம் தேர்தல் இடம்பெற்ற தினத்தன்று நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான சூழ்நிலை காணப்படவில்லை.


தேர்தலன்று மக்களை வாக்களிக்க விடாது தடுத்து நிறுத்தி போலியான அடையாள அட்டைகளை தயாரித்து கள்ள வாக்குகள் போடப்பட்டன. அமைச்சர்கள், அரசாங்க முக்கியஸ்தர்கள் குண்டர்களை பயன்படுத்தி மேசமான வாக்குக் கொள்ளையில் ஈடுபட்டனர்.


அரசாங்கம் தமிழ் இனவாதத்தை முன்னெடுத்தது. ஹக்கீம் முஸ்லிம் இனவாதத்தை முன்னெடுத்தார். அத்தோடு அரசு தமது முதலமைச்சர் வேட்பாளர் யாரென அறிவிக்காது குழப்பகரமான நிலையில் தேர்தலை நடத்தி முடித்துள்ளது. இவ்வாறானதொரு நிலையில் ஜே.வி.பி. இனவாதத்திற்கும் பிரிவினைவாதத்திற்கும் எதிராக தனித்து போட்டியிட்டு ஒரு இடத்தை பிடித்துக் கொண்டமை பெருமைக்குரியதாகும்.


எமக்கு வாக்களித்த மக்களுக்கு இத்தருணத்தில் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். 1981 இல் வடக்கில் நூலகத்தை தீயிட்டுக் கொழுத்தி வாக்குகளை அபகரித்து அன்றைய ஐ.தே.க. அரசாங்கம் தேர்தலை நடத்தியது. இதனால் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையிழந்த மக்கள் பயங்கரவாதத்திற்குள் தள்ளப்பட்டனர். இதேநிலை இன்று கிழக்கிலும் தலைதூக்கியுள்ளது|| எனவும் ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

 

 

11.05.08

கிழக்கு மாகாண தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி

கிழக்கு மாகாண சபைக்காக நேற்று நடைபெற்ற தேர்தலில் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெற்றிருக்கின்றது. 37 உறுப்பினர்களைக் கொண்ட மாகாண சபையில் 20 ஆசனங்களை ஐக்கிய தேசிய முன்னணி பெற்றிருக்கின்றது. இத்தேர்தலில் 15 ஆசனங்களைப் பெற்று ஐக்கியதேசியக் கட்சி இரண்டாவது இடத்திலும், ஒரு இடத்தைப் பெற்றுக்கொண்ட ஜே.வி.பி. மூன்றாவது இடத்திலும் உள்ளன. புளொட், ஈ.பி.ஆர்.எல். என்பன அமைத்துக்கொண்ட தமிழ் ஜனநாயகக் கூட்டணியும் ஒரேயொரு இடத்தைப் பெற்று நான்காவது இடத்துக்கு வந்திருக்கின்றது. ஈ.பி.டி.பி., ஈழவர் ஜனநாயக முன்னணி ஆகியன மிகவும் குறைந்தளவு வாக்குகளைப் பெற்று இத்தேர்தலில் படுதோல்வியடைந்திருக்கின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்திலும், அம்பாறை மாவட்டத்திலும் ஆளும் கட்சி பெரும் வெற்றியைப் பெற்றிருக்கின்றது. அதேவேளையில் திருமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றிருக்கின்றது.

மாவட்ட அடிப்படையில் பார்க்கும் போது 11 உறுப்பினர்களைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் முடிவுகளே முதலாவதாக முழுமையாக அறிவிக்கப்பட்டது. இங்கு ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1,05,341 வாக்குகளைப் பெற்று ஆறு ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கின்றது. ஐக்கிய தேசியக்கட்சி 58,602 வாக்குகளைப் பெற்று நான்கு ஆசனங்களைப் பெற்றிருக்கின்றது. ஜனநாயக தமிழ்க் கூட்டமைப்பு 7,714 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தைப் பெற்றிருக்கின்றது. இங்கு போட்டியிட்ட ஈ.பி.டி.பி. 5,418 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ள போதிலும் எந்தவொரு ஆசனத்தையும் பெற்றுக்கொள்ளவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மட்டக்களப்பு, பட்டிருப்பு, கல்குடா ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளிலும் ஆளும் கட்சியே வெற்றி பெற்றிருக்கின்றது.

10 உறுப்பினர்களைக் கொண்டுள்ள திருமலை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இங்கு ஐக்கிய தேசியக் கட்சி 70,858 வாக்குகளைப் பெற்று 5 இடங்களைப் பெற்றிருக்கின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 59,298 வாக்குகளைப் பெற்று நான்கு இடங்களைப் பெற்றிருக்கின்றது. ஜே.வி.பி. 4,266 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தை வென்றிருக்கின்றது.

திருமலை மாவட்டத்தில் திருகோணமலை, மற்றும் மூதூர் தேர்தல் தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றிருக்கின்றது. சேருவிலவில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றிருக்கின்றது.

14 உறுப்பினர்களைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இதன் முடிவுகளே இறுதியாக அதாவது இன்று காலை 12.00 மணியளவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இங்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1,44,247 வாக்குகளைப் பெற்று எட்டு ஆசனங்களை வென்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 1,21,272 வாக்குகளைப் பெற்று ஆறு ஆசனங்களைப் பெற்றுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில், அம்பாறை மற்றும் சம்மாந்துறை ஆகிய தேர்தல் தொகுதிகளில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெற்றிருக்கின்றது. கல்முனை தேர்தல் தொகுதியில் மட்டும் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றிருக்கின்றது. தபால் மூலமான வாக்களிப்பிலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே அதிகளவு வாக்குகளைப் பெற்றிருக்கின்றது.

இதற்கு மேலாக இரண்டு போனஸ் ஆசனங்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குக் கிடைத்திருக்கின்றது. இந்த முடிவுகளின் படி கிழக்கு மாகாணத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 20 இடங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 15 இடங்களையும், ஜே.வி.பி. ஒரு இடத்தையும், ஜனநாயக தமிழ்க் கூட்டமைப்பு ஒரு இடத்தையும் பெற்றிருக்கின்றது. 37 உறுப்பினர்களைக் கொண்ட கிழக்கு மாகாண சபைக்கு ஆட்சி அமைப்பதற்கு குறைந்த பட்சம் 19 ஆசனங்களையாவது பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த நிலையில் ஒரேயொரு மேலதிக ஆசனத்தப் பெற்று பொது ஜன முன்னணி கிழக்கு மாகாணத்தின் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

11.05.08
எந்தவகையிலும் இந்த தேர்தலை நியாயமானளதாக கருதமுடியாது: ஜே.வி.பி.

கிழக்கில் நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தல்களை எந்த வகையிலும் நியாயமானதும், சுதந்திரமானதுமாக கருதப்படப்பட முடியாது எனவும், இதுவொரு தேர்தல் கொள்ளை எனவும்; ஜே.வி.பி.யின் முதன்மை வேட்பாளர் விமல் பியதிஸ்ஸ கடுமையாக அரசாங்கத்தைக் குற்றஞ்சாட்டியிருக்கின்றார்.

நாட்டு மக்களோ அல்லது கிழக்கு மக்களோ சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் இந்த தேர்தல் நடத்தப்பட்டதாகவும், கிழக்கில் பயங்கரவாதம் முற்றாக நீங்கியுள்ளதாக அரசாங்கம் எவ்வளவு அறைகூவல் விடுத்தாலும் உண்மை நிலை அதுவல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறை குண்டு வெடிப்பு, அம்பாறையில் இடம்பெற்ற மோட்டார் தாக்குதல், திருகோணமலையில் கப்பல் மூழ்கடிக்கப்பட்டமை மற்றும் பிள்ளையானும் அரசாங்கமும் இணைந்து அரங்கேற்றிய வன்முறைகளுக்கு மத்தியில் ஜனநாயக ரீதியில் வாக்களிக்குமாறு மக்களை கோருவது கேலிக்கூத்தாக அமைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், குச்சவெளி, மூதூர், பெரியகுளம் போன்ற பிரதேசங்களில் பிள்ளையானின் ஆயுதக் குழுவும், அமைச்சர் பதியூதீன் உள்ளிட்ட அராசங்க அமைச்சர்களின் வன்முறைகளாலும் கிழக்குத் தேர்தல் மோசடி ம&