பத்தாவது உலகத் தமிழ் மாநாடு
கலந்து கொள்பவர்கள் விபரம்:
இயக்கத்தின் அகிலத் தலைவர் பண்பாட்டு இயக்கச் செம்மல் ப.கு.சண்முகம் தலைமையில்,
மலேசிய பண்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ
DR. Raisyatim மாநாட்டை தொடங்கி வைக்க,
மலேசிய மலாயா பல்கலைக்கழகம் துணை வேந்தர் டத்தோ ரவ்வியாசாலின், மலேசிய துணை
அமைச்சர்களான டத்தோ எஸ்.வீரசிங்கம், டத்தோ எஸ். சோதிநாதன், மலேசிய பொதுப்பணிதுறை
அமைச்சரின் மகன் டத்தோ எஸ் வேல்பாரி,
தமிழ்நாடு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழ்நாடு விடுதலை
சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளன், தமிழ்நாடு முன்னாள் துணைவேந்தர்
முனைவர் க.ப. அறவாணன
இலங்கை சமூகசேவைகள் அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரன், இலங்கை தமிழ்
தேசியகூட்டமைப்பு பாரளுமன்ற உறுப்பினர்களான மாவை. சேனாதிராசா, சட்டத்தரணி
சிறிகாந்தா,
மலேசியா முன்னாள் அமைச்சர் கா. குமரன், மலேசிய டான்சிறி கே.ஆர் சோமசுந்தரம், டத்தோ
பி.சகாதேவன்,
ஆகியோர் சிறப்புரைகள் நிழ்த்த மாநாடு ஆரம்பமாகவுள்ளது.
மலேசியாவில் இருந்து மலாயா பல்கலைக்கழகத் தமிழ்துறைத் தலைவர் டாக்டர் எம். குமரன்,
மலாயா பல்கலைக்கழக டாக்டர் எம் கிருஸ்ணன் உட்பட 400இற்கும் மேற்பட்ட பேராளர்களும்,
சிங்கப்பூரில் இருந்து பேராசிரியர் இரத்தின வெங்கடேசன், பேராசிரியர் ஆர்.
வேல்முருகன் உட்பட 10இற்கு மேற்பட்ட பேராளர்களும்,
ஐரோப்பாவில் இருந்து உ.த.ப இயக்க அனைத்துலக்கல்விப் பொறுப்பாளர் புலவர்
நா.சி.கமலநாதன், உ.த.ப. இயக்க பிரான்சு கிளைத் தலைவர் அலன் ஆனந்தன், நோர்வேக் கிளைத்
தலைவர் சு. தியாகலிங்கம், பிரித்தானியக் கிளைத் தலைவர் கா. இராசமனோகரன்,
சுவிஸ்லாந்து கிளைத் தனலவர் பொ.முருகவேள், சேர்மனிக் கிளைத் துணைத்தலைவர் கவிக்கோ
பரமவிசுவலிங்கம் உட்பட 20இற்கு மேற்பட்ட பேராளர்களும்,
கனடாவில் இருந்து உ.த.ப. இயக்க அனைத்துலக துணைத்தலைவர் அறநெறிக்காவலர் வேல்.
வேலுப்பிள்ளை, உ.த.ப. இயக்கத் துறைக்காப்பாளர் பேராசிரியர் இ. பாலசுந்தரம், உ.த.ப.
இயக்க மக்கள் தொடர்பாளர் லோகன் லோகேந்திரலிங்கம் உட்பட 15இற்;கு மேற்பட்ட
பேராளர்களும்
தென்னாபிரிக்காவில் இருந்து உ.த.ப. இயக்க ஆபிரிக்கா ஒன்றிய தலைவர் முனைவர் வே.
கோவிந்தசாமி, உ.த.ப. இயக்க டர்பன் மாநில பொறுப்பாளர் சைவப்புலவர் சினனப்பன்,
தென்னாபிரிக்க கூட்டிணைப்புக் கழகத் தலைவர் மிக்கிசெட்டி உட்பட 10இற்கும் மேற்பட்ட
பேராளர்களும்,
தழிழகம், புதுவை, அந்தமான் ஆகிய இடங்களில் இருந்து உ.த.ப. இயக்க தலைமை துணைத் தலைவர்
பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன், உலகத் தழிழர் பேரவைத் தலைவர் முனைவர் சனாதனம்,
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக பேராசியர் எழில்வசந்தன் புதுவை பல்கலைக்கழக பேராசிரியர்
நா. இளங்கோ, பேராசிரியர் அரங்கமுழுகையன், அமுகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் தாமோதரன்
மனோன்மணி சுந்தரனார், பல்கலைக்கழக பேராசியர் பே. நடராசன், புதுவை உ.த.ப இயக்கத்
தலைவர் வீரமதுரகரி, செயலதிபர் தமிழ்மணி, அந்தமானில் இருந்து அந்தமான் கிளைத் தலைவர்
தாமோதரன் உட்பட 50இற்;கு மேற்பட்ட பேராளர்களும்
நியுசிலாந்தில் இருந்து உ.த.ப. இயக்கக் கிளைத் தலைவர் சிவபாலன்; ஆவுஸ்திரேவியாவில்
இருந்து ஆவுஸ்திரேலியா கிளைத்தலைவர் ஆர் விக்கிரமசிங்கம் ஜேபி உட்பட 10இற்கு
மேற்பட்ட பேராளர்களும்
இலங்கையில் இருந்து கொழும்பு பல்கலைக்கழக கல்வி பீடாதிபதி பேராசிரியர் சந்திரசேகரன்,
உ.த.ப. இயக்க இலங்கைக் கிளைச் செயலார் சிவநேயச்செல்வர் இ தவகோபால், வீரகேசரி பிரதம
ஆசிரியர் வி. தேவராசா உட்பட 10 இற்கும் மேற்பட்ட போராளர்களும்
கலந்துகொள்கிறார்கள்.
பத்தாவது உலகத் தமிழ் மாநாடு
20-22 யூலை 2007 மலாயாப் பல்கலைக்கழகம், கோலாலம்பூர், மலேசியா
உலகத்
தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பத்தாவது உலகத் தமிழ் மாநாட்டை மலேசியாவின்
கோலாலம்பூரில் யூலை 20,21,22 - 2007இல் நடைபெற உள்ளது.
உலகளாவிய தமிழினத்தை மொழியாலும் பண்பாட்டினாலும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற
பெருநோக்குடன் அரசியல் சார்பற்று இனமத பேதங்களை கடந்து தாய்த்தமிழகத்திலம்
சேய்த்தமிழீழத்திலும் வாழும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்று
குறிக்கோளுடனும், தமிழினம் ஒரே குடையின் கீழ் செயற்பட வேண்டும் என்ற கொள்கையுடனும்,
இவ்வியக்கம் 1974ஆம் ஆண்டு தமிழீழத்தின் கலாச்சாரத் தலைநகர் யாழ்ப்பாணத்தில்
நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் அமைக்கப்பட்டது. இந்த உலகத்
தமிழ் பண்பாட்டு இயக்கம் தோன்றக் காரணம் இருந்துவர் குரும்பசிட்டி கனகரத்தினம்
அவர்கள்.
இவருடன் அமரர் பேராசிரியர் வித்தியானந்தன் (ஈழம்), அமரர் பேராசிரியர் சாலை
இளந்திரையன் (தமிழகம்), அமரர் பேராசிரியர் சாளினி இளந்திரையன்(தமிழகம்), அமரர்
பேராசிரியர் நா. வீராப்பனார் (மலேசியா), அமரர் சோதிநாதன் (தென்னாபிரிக்கா), திருமதி
சோதிநாதன் (தென்னாபிரிக்கா), அமரர் வணபிதா தனிநாயகம் அடிகளார் (ஈழம்) மற்றும் உலகப்
பேராளர்களை உட்படுத்தி 08.01.74 அன்று பேரவை உருவாக்கப்பட்டது.
32 கிளைகளை கொண்ட உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் யுனஸ்கோவில் பதிவுசெய்யப்பட்ட ஒரே
ஒரு தமிழ் அமைப்பு என்ற பெருமையையும் பெறுகிறது. உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம்
இதுவரை 9 உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி உள்ளது.
முதலாவது மாநாடு 1977 (தமிழ்நாடு சென்னை), இரண்டாவது மாநாடு 1980 (மொரிசியஸ்)
மூன்றாவது மாநாடு 1985(தமிழ்நாடு சேலம்), நான்காவது மாநாடு 1987 (மலேசியா) ஐந்தாவது
தமிழ்நாடு 1992 (அவுசுரேலியா-சிட்னி), ஆறாவது மாநாடு 1996 (கனடா), ஏழாவது மாநாடும்
இயக்கத்தின் வெள்ளவிழாவும் 1999 (தமிழ்நாடு சென்னை), எட்டாது மாநாடு 2001 (தென்னாபிரிக்கா),
ஒன்பதாவது மாநாடு 2004 (புதுச்சேரி) என்று நடைபெற்று பத்தாவது மாநாடு மலேசியா
கோலாலம்பூரில் நடைபெற உள்ளது.
பத்தாவது உலகத் தமிழ் மாநாட்டை மலேசியா கோலாலம்பூரில் நடத்த 03-07-2005 அன்று கூடிய
இயக்கத்தலைமைப் பேரவை முடிவு செய்தது. இயக்கத்தின் அகிலத்தலைவர் திரு ப. கு.
சண்முகம் தலைமையில் நடந்த பேரவைக் கூட்டத்தில் இயக்கத்தின் துணைத் தலைவர்கள்
பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன், அறநெறிக்காவலர் வேல். வேலுப்பிள்ளை, செயலாளர்
நாயகம் துரை. கணேசலிங்கம் அனைத்துலகக் கல்விப் பொறுப்பாளர் புலவர் நா. சி. கமலநாதன்,
காப்பாளர் பேராசிரியர் இ. பாலசுந்தரம், அனைத்துலக மகளிர் பொறுப்பாளர் திருமதி
பொன்னி கணேசன், நடவடிக்கைக்குழு உறுப்பினர் பொ. சா. வெங்கடேசன், தலைமையக உதவித்
தலைவர் கவிக்கோ பரம விசுவலிங்கம், சேர்மன் கிளைச் செயலாளர் நயினை விசயன், மற்றும்
கிளைகளின் செயற்குழுவினர் கலந்துகொண்டனர்.
பத்தாவது உலகத் தமிழ் மாநாட்டை உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கமும் மலாயா பல்கலைக்கழக
இந்திய ஆய்வியல்துறையும் இணைந்து மலாயா பல்கலைக்கழகத்தில் (ஆயடயலய ருniஎநசளவைல)
நடத்த உள்ளன.
இம் மாநாட்டில் "உலகத் தமிழர்கள் : புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியல் - அன்றும்
இன்றும்" என்னும் கருப்பொருளின் அடிப்படையில் புலம்பெயர் தமிழர்களின் அயல்புலச்
சூழல், தாய்மொழி அறிவு, தமிழர் பண்பாடு நாகரீகம் போற்றுதலோது அவைகளை அடுத்த
தலைமுறைக்கும் எடுத்து செல்லல், அரசியல் பொருளாதார சமூகத் துறைகளில் மேம்பாடு
ஆகியவற்றில் உள்ள அறைகூவல்களை எதிர்கொண்டு முனைப்புடன் செயற்படுதல் நோக்கமாக
எடுத்துக் கொள்ளப்படும்.
இந்த நோக்கத்துடன் தமிழ்வழி இறைவழிபாடு, தமிழாண்டு, தமிழ்கல்வி ஊக்குவிப்பு, தமிழ்
மரபுகளை நிலைப்படுத்துதல், தனித்தமிழ் ஊக்குவிப்பு, தமிழர் இறையாண்மை, தமிழ்கலை
மீட்பு, தமிழ் பாதுகாப்பு, தமிழர் பண்பாடு, தமிழர் நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு,
மறைந்த மறைக்கப்பட்ட தமிழர் வரலாற்று தேடல்கள், எதிர்காலத் தமிழினம் எதிர்நோக்கும்
சவால்கள், தமிழ் ஊடகங்கள் போன்ற விடயங்களும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு
தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.
மாநாட்டு ஆய்வுகளும் தமிழறிஞர்களின் துறைசார் புத்தாய்வுகளும் கொண்ட மாநாட்டு மலர்
வெளியிடப்படும். அத்துடன் தமிழ், தமிழின ஆவண கண்கண்காட்சியும் இடம்பெறும். தமிழ்
வரலாறு தொடர்பான நூல்கள், ஒலிப்பேழைகள், ஒலி நாடாக்கள், நிழற்படங்கள் போன்றவற்றை
வைத்திருப்பவர்கள் அவற்றை எமக்கு அனுப்பியோ அல்லது நேரில் கொண்டுவந்து தந்தோ அவைகளை
ஆவணக் கண்காட்சியில் இடம்பெறச் செய்ய முடியும். தமது ஆவணங்களை இடம்பெற வைக்க
விரும்புபவர்கள் மற்றும் கலந்து கொள்ள விரும்புபவர்கள் அது குறித்து யூன் 30இற்குள்
அறியத் தரும்படி மாநாட்டுக் குழு கேட்டுக் கொள்கிறது.
தொடர்புகளுக்கு:
|
பா. கு. சண்முகம் MALAYSIAN MOVEMENT FOR TAMIL CULTURE No. 28, Lintang Selar, Kawasan 7, Sungel Berfek 41100 Klang, Selangor D.E. Malaysia Tel.: 0060 3337 22 999
|
துரை. கணேசலிங்கம்
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் Salz Bergener Str. 142 48431 Rheine Germany Tel.: 0049 5971 14258 |
"ஒரு ரேடியோ"வில் அரசியல்
கருத்தரங்கம்!
ஒவ்வொரு திங்கட் கிழமையும் இலண்டன் நேரம் இரவு 9:00 மணியில் இருந்து 10:00 மணிவரை
அரசியல் கருத்தரங்க நிகழ்வு "வட்ட மேசை" என்ற பெயரில் நடைபெற்று வருகிறது.
நேயர்களும் பங்குபற்றி தமது கருத்துக்களைக் தெரிவிக்கின்ற நிகழ்ச்சியாக இது
நடைபெறுகிறது. இடையிடையே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும்
இந் நிகழ்வில் கலந்து கொள்வது உண்டு.
கட்டுநாயக்கா மீதான வான்புலிகளின் தாக்குதல் பற்றிய கருத்துக்கள் இன்றைக்கு
(26.03.07) நடக்க இருக்கும் "வட்ட மேசை" நிகழ்ச்சியில் முக்கிய இடம்
பிடிக்கும்.
Satellite: Hot Bird
Frequency: 12577 MHz
Orbital position: 13
W.E. Flag: East
Polarisation: Horizontal
Modulation: QPSK
Symbol Rate: 27.5 Msymbols
FEC 3/4
"கேள்வி - பதில்கள்"
வரும்
ஞாயிற்றுக்கிழமையில் (25.03.07) இருந்து வெப்ஈழத்தில் "கேள்வி - பதில்கள்" என்ற
புதிய பகுதி ஆரம்பிக்கப்படுகிறது. "கேள்வி - பதில்" ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்
வெளிவரும்.
பல வாசகர்கள் மின்னஞ்சல் மூலமாகவும், நேரிலும், தொலைபேசியிலும் பலவிதமான
கேள்விகளையும், கருத்துக்களையும் கேட்பதும் தெரிவிப்பதும் உண்டு. இதனாலேயே இப்படி
ஒரு "கேள்வி - பதில்" பகுதிகளை ஆரம்பிப்பது நல்லது என்ற சிந்தனை உருவானது.
ஆகவே இப் பகுதிக்கு உங்கள் கேள்விகளையும் அனுப்புங்கள். முடிந்தவரை கேள்விகளை
தமிழில் அனுப்புங்கள். கட்டுரை போன்ற நீண்ட கேள்விகளை தவிர்த்துக்கொள்வதும் நல்லது.
கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் யார் என்று அறிந்துகொள்ள நீங்கள் விரும்புவீர்கள்.
வேறு யாருமல்ல. நான்தான். பொதுவாக மற்றைய ஊடகங்களில், அதை நடத்துபவர்களே வேறு புனைப்
பெயர்களில் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்கள். எதற்கு ஒரு புனைபெயர் என்ற எண்ணத்தில்,
சொந்தப் பெயரிலேயே பதில் அளிக்க இருக்கிறேன்.
சிறந்த கேள்விக்கு பரிசு எதுவும் தரமாட்டேன். கேள்விகள் என்றாலே அவைகள்
சிறந்தவைகள்தான் என்பது என்னுடைய கருத்து. முடிந்தால் நீங்கள் சிறந்த பதிலுக்கு
பரிசு தாருங்களேன்!
பரிசு தராவிட்டாலும், பாராட்டாவது தருவீர்கள் என்ற நம்பிக்கையில் உங்கள்
கேள்விகளுக்கு பதில் அளிக்க காத்திருக்கிறேன்.
- வி.சபேசன்
"ஒரு ரேடியோ"
கடந்த சில வாரங்களாக
பரீட்சார்த்த ஒலிபரப்பை நடத்தி வரும் "ஒரு ரேடியோ" இன்று சனிக்கிழமை (10.02.07)
முதல் நிகழ்ச்சிகளை ஆரம்பிக்கின்றது.
பிரித்தானிய நேரம் மதியம் 12 மணிக்கு (மத்திய ஐரோப்பிய நேரம் 1 மணி)
சம்பிரதாயபூர்வமான நிகழ்வுகளுடன் ஒரு ரேடியோவின் ஒலிபரப்புக்களை புகழ்பெற்ற
ஒலிபரப்பாளர் ஒருவர் ஆரம்பித்து வைக்கின்றார்.
வானலையில் முதற்குரலாக ஒலிக்கும் அக்குரலுடன் "ஒரு ரேடியா" கலையகத்தை
சேர்ந்தவர்களும் மற்றும் முன்னணிக் கலைஞர்களும் பங்கெடுத்துக் கொள்கின்றனர்.
நேயர்கள் வானலையில் கலந்து கொள்வதற்கு வசதியாக உங்கள் தொலைபேசி அழைப்புக்கள்
ஏற்றுக்கொள்ளப்படும்.
வாருங்கள் வானலையில் சந்திப்போம். இணைந்தே பயணிப்போம்.
அழைக்க வேண்டிய இலக்கம்: 44 20 70 43 43 13
ஒரு ரேடியோ செய்மதியில்:
Satellite: Hot Bird
Frequency: 12577 MHz
Orbital position: 13
W.E. Flag: East
Polarisation: Horizontal
Modulation: QPSK
Symbol Rate: 27.5 Msymbols
FEC 3/4
இணையத்தில்: www.oruradio.com
http://www.webeelam.blogspot.com
ஐரோப்பிய தமிழ் வானொலியில் பகுத்தறிவு நிகழ்ச்சி!
தினமும்
ஐரோப்பிய நேரம்
13.30 மணியில் இருந்து 14.00 வரை
"நாமும் நமது வாழ்வியலும்" என்னும்
தலைப்பில் சபேசன் வழங்கும் பகுத்தறிவு நிகழ்ச்சி இடம்பெறுகிறது. பார்ப்பனியம்,
இந்து மதம் போன்றவை குறித்து விளக்கம் அளிக்கின்ற நிகழ்ச்சி இது. கேட்கத்
தவறாதீர்கள்!!!
நிகழ்ச்சியை வானொலியிலும் இணையத் தளத்திலும் கேட்கலாம்.
வானொலி குறித்த தகவல்களுக்கு: http://www.tamilfm.eu/